சுடச்சுட

  

  பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வென்றார். இது இவருக்கு 9-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும்.

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ரபேல் நடாலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

  இதில் "கிங் ஆஃப் கிளே' என்று அழைக்கப்படும் நடால் 3-6, 7-5, 6-2, 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார். இது இவருக்கு 9-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும். அதுமட்டுமல்லாமல் இது இவரது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

  முதல் செட்டை ஜோகோவிச் சிறப்பாக ஆடி வென்றார். ஆனால் அதற்கடுத்த செட்களில் சுதாரித்து ஆடி வெற்றி கண்ட நடால், செம்மண் ஆடுகளத்தில் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்தார். மொத்தம் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்தது இந்த ஆட்டம்.

   

  பீட் சாம்ப்ராஸ் சாதனை சமன்: இந்தப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்தார்.

  நடாலை விட அதிகமாக ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்தான் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். அவர் 17 பட்டங்களைக் கைப்பற்றியிருக்கிறார்.

   

  பல சாதனைகள்: இந்த போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் நடால். தொடர்ந்து 5 முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றவர் இவர் மட்டுமே.

  மேலும் பிரெஞ்சு ஓபனில் ஆடிய ஆட்டங்களில் 66 -ல் வெற்றி கண்டு சாதனை படைத்திருக்கிறார். இங்கு அவர் பெற்றது ஒரு தோல்வி மட்டுமே.

   

  வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

   

  கிராண்ட்ஸ்லாம்    ஆண்டு

  ஆஸ்திரேலியன் ஓபன்     2009

  பிரெஞ்சு ஓபன்     2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014.

  விம்பிள்டன்     2008, 2010

  யுஎஸ் ஓபன்    2010, 2013.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai