சுடச்சுட

  
  kane

  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர் கேன் வில்லியம்ஸன் சதம் அடித்தார்.

  இந்த போட்டி மேற்கிந்தியத் தீவின் கிங்ஸ்டன் நகரிலுள்ள சபீனா பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

  நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

  தொடக்க ஆட்டக்காரர்களாக லத்தமும், ஃபுல்டனும் களமிறங்கினர்.

  ஆனால் ஃபுல்டன் ஒரு ரன் எடுத்திருந்தபோது டெய்லர் பந்தில் ராம்தினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

  இதைத் தொடர்ந்து லத்தமுடன், கேன் வில்லியம்ஸன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் பொறுமையாக விளையாடி விக்கெட் விழாதவண்ணம் பார்த்துக்கொண்டது. நிதானமாக விளையாடியபோதும் அவ்வப்போது பந்துகளை பெüண்டரிக்கு இருவரும் அனுப்பிக் கொண்டிருந்தனர். லத்தமும், வில்லியம்ஸனும் அடுத்தடுத்த அரை சதம் கடந்தனர்.

  சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி லத்தம் சென்றுகொண்டிருந்த வேளையில் அவர் ஆட்டமிழந்தார். ஷில்லிங்போர்ட் பந்தில் அவரிடமிருந்து பிடிகொடுத்து அவர் வீழ்ந்தார். அவர் மொத்தம் 206 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பெüண்டரிகள் அடங்கும்.

  அதன் பின்னர் வில்லியம்ஸனுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார்.

  வில்லியம்ஸன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் வில்லியம்ஸன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.

  திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் ஆட்டத்தின்போது 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்ஸன் வீழ்ந்தார். டெய்லர் 55 ரன்களிலும், மெக்கல்லம் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  நீஷம் 38 ரன்களும், வாட்லிங் 31 ரன்களும் எடுத்து களத்திலிருந்தனர்.

  மேற்கிந்தியத் தீவு தரப்பில் ஷில்லிங்போர்ட், பென் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், டெய்லர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  சுருக்கமான ஸ்கோர்: நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 354-5வி (லத்தம் 83, புல்டன் 1, வில்லியம்ஸன் 113, டெய்லர் 55, நீஷம் 38*, வாட்லிங் 31*, டெய்லர் 1வி-31, ஷில்லிங்போர்ட் 2வி-99, பென் 2வி-110).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai