சுடச்சுட

  
  argentina

  முதன்முறையாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, ஆர்ஜெண்டினா அணி சாதனை புரிந்துள்ளது.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இதனால், பி பிரிவில் 12 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தைப் பிடித்தது.

  மற்றொரு ஆட்டத்தில் கொரிய அணியை 6-1 என்ற கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. இருப்பினும், 9 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தைப் பிடித்த அந்த அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

  உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் ஜெர்மனி நாடு திரும்புகிறது.

  இதற்கு முன்னர், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பையில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை.

  பி பிரிவில் உள்ள நெதர்லாந்து அணி அரையிறுதிச்சுற்றை ஏற்கெனவே உறுதி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

  ஏ பிரிவில் முதல் 2 இடங்களில் உள்ள ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai