சுடச்சுட

  

  அணிகளின் உபகரணங்கள்

  உலகக் கோப்பை போட்டிகளின்போது அணிகளின் செயல்பாடு எப்படி கவனிக்கப்படுகிறதோ அதுபோல, அடுத்த 4 வாரங்களுக்கு அணி வீரர்களின் சீருடைகள், ஷூ உள்ளிட்ட உபகரணங்களும் ரசிகர்களின் கவனத்தை பெரும்பாலும் ஈர்க்கும். குறிப்பிட்ட நிறுவனங்களின் உபகரணங்களைப் பயன்படுத்தும் வகையில் 32 அணிகளும் வெவ்வேறு நிறுவனங்களுடன் ஓராண்டுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

  இதன்மொத்த மதிப்பு சுமார் 2,193 கோடி ரூபாயாகும். இதில், மற்ற அணிகளின் ஒப்பந்த மதிப்பைவிட, ஃபிரான்ஸ் அணியின் ஒப்பந்த மதிப்பு அதிகமாகும். அந்த அணி நைக் நிறுவனத்துடன் சுமார் ரூ. 355 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஃபிரான்ûஸத் தொடர்ந்து, இங்கிலாந்து 2-ம் இடத்திலும், ஜெர்மனி 3ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  அணிகளை ஒப்பந்தம் செய்த நிறுவனங்களின் வரிசையில் நைக் முதலிடத்திலும் (10 அணிகளுக்கு), அடிடாஸ் 2ம் இடத்திலும் (9 அணிகளுக்கு), பூமா 3ஆம் (8 அணிகளுக்கு) இடத்திலும் உள்ளன. இவற்றைத் தவிர அதிகம் அறியப்படாத பர்டா, உல்ஸ்போர்ட், ஜோமா, மாரத்தான் மற்றும் லோடா ஆகிய நிறுவனங்களும் அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளன.

   

  இணையத் தேடலில் ரோட்ரிக்ஸ் முதலிடம்

  உலகக் கோப்பையையொட்டி, இளம் வீரர்களில் ஜொலித்து வருபவர்கள் யார் என்ற இணையத் தேடலில் ஸ்பெயினின் ஜெஸி ரோட்ரிக்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர், துருக்கியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவராவார்.

  இணையத்தேடலில் ரோட்ரிக்ûஸத் தொடர்ந்து பெல்ஜியத்தின் திபாட் கியூடோய்ஸ் 2ஆம் இடத்தையும், ஸ்பெயினின் இஸ்கோ 3ஆம் இடத்தையும், ஃபிரான்ஸின் பால் போக்பா 4-ம் இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை ஃபிரான்ஸ் வெல்வதற்கு போக்பா காரணகர்த்தாவாக இருந்தது நினைவுகூரத்தக்கத்து. அத்தொடரில் போக்பா தங்க பூட்ûஸ வென்றார்.

   

  "மற்ற நாடுகளின் கொடிகளை அகற்றுங்கள்'

  உலகக் கோப்பை ஜுரம், போட்டியில் கலந்த கொண்டுள்ள நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதன் தாக்கம் தற்போது வங்கதேசத்தில் எதிரொலித்துள்ளது. தங்கள் வீடுகளின் மேற்பகுதியில் பிற நாட்டு அணிகளின் கொடிகளை பறக்க விட்டு தங்களது ஆதரவை வெளிப்படையாகவே வங்கதேசத்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பழக்கம் வங்கதேசத்தின் மேற்குப் பகுதியில் அதிகம். அவ்வாறு பறக்கவிடும் கொடிகளில் பிரேசில் மற்றும் ஆர்ஜெண்டினா நாடுகளினுடையதே அதிகம்.

  பிற நாடுகளின் கொடிகளைப் பறக்க விடுவதனால், வருத்தம் அடைந்த அந்நாட்டு அரசு, அக்கொடிகளை தயவு செய்து அகற்றி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை செய்தித்தாள்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளது."மற்ற நாடுகளின் சீருடைகளையோ அல்லது பேனர்களையோ பயன்படுத்துவது பிரச்னையல்ல. ஆனால், வேறு நாடுகளின் கொடிகளைப் பறக்க விடுவது, வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் உள்ளது' என்று ஜெஸ்úஸார் மாவட்ட அரசு அதிகாரி ரஹ்மான் தெரிவிக்கிறார்.வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டே அதிக பிரபலம் என்றாலும், கால்பந்துக்கும் அந்நாடு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது வங்கதேசத்தில் மின்சாரம் தடைபட்டது. அதனால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின்சாரம் தடையில்லாமல் இருக்கும் வகையில் தொழிற்சாலைகளை மூட வங்கதேச அரசு உத்தரவிட்டது. இதுதவிர, 2011-ம் ஆண்டில், ரூ. 23.71 கோடி செலவு செய்து மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணிக்கும், நைஜீரியன் அணிக்கும் இடையேயான ஆட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  கோல்-லைன் தொழில்நுட்பம்

  இது கோலா, இல்லையா என்ற சந்தேகம் உலகக் கோப்பையில் இல்லை. ஏனென்றால், ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் முதன்முதலாக கோல்-லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரு கோல் கம்பத்தைக் கவரும் வகையில் தலா 7 கேமராக்கள் பொருத்தப்படும். போட்டி நடைபெறும் 12 மைதானங்களிலும் இந்த வசதி உள்ளது. இந்த கேமரா, ஒரு நிமிடத்துக்கு சுமார் 500 படங்களை எடுக்கும் தன்மை கொண்டவை. இந்த வசதியினால், பந்து கோல் கம்பத்துக்குள் சென்றதா என்பது துல்லியமாக தெரிந்து விடும். இந்த கேமராக்களைப் பயன்படுத்தி 2,400-க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் மிகச் சரியான முடிவை அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  வீதிகளில் பிரமாண்ட திரை

   

  கால்பந்து ஆட்டத்தை தங்கள் வீடுகளில் காண்பதை விட, பொது இடங்களில் கண்டு களிப்பதற்கே பெரும்பான்மையான கால்பந்து ரசிகர்கள் விரும்புவர். அதனை ஈடு செய்யும் வகையில், உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் பிரேசிலின் 12 நகரங்களில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. முதல் பிராண்ட திரை ஃபோர்டலிஸா நகரில் திறக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai