சுடச்சுட

  
  hand_shake

  கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில், தமிழக அணி 24-15 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கர் அணியை வென்றது.

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தெற்காசிய ஹேண்ட்பால் சங்கத் தலைவர் எம்.ராமசுப்பிரமணி, போட்டியைத் தொடங்கி வைத்தார்.

  முதல் போட்டியில் தமிழக அணி சத்தீஸ்கரை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணியும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் மோதின. இதில் 8-28 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வெற்றி பெற்றது.

  மூன்றாவது ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 29-5 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

  இப்போட்டியில் மொத்தம் 24 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்த அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முறைப்படி நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். பின்னர் நாக்அவுட் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.

  தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள், முதன்முதலாக குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டரங்கில் கோவையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai