Enable Javscript for better performance
நீஷம் சதம்; நியூஸிலாந்து 508 ரன்கள்- Dinamani

சுடச்சுட

    

    நீஷம் சதம்; நியூஸிலாந்து 508 ரன்கள்

    By dn  |   Published on : 10th June 2014 11:39 PM  |   அ+அ அ-   |    |  

    neesham

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 508 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

    மேற்கிந்தியத் தீவுகளின் ஜமைக்காவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    முதல் நாள் முடிவில் நியூஸிலாந்து, 2 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது.

    கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் திங்கள்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

    இரண்டாம் நாளில் மேற்கொண்டு 8 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். 55 ரன்களில் டெய்லர் வெளியேறினார்.

    நீஷம், வாட்லிங் அபாரம்: இதையடுத்து களமிறங்கிய ஜிம்மி நீஷம், வாட்லிங் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 279 ரன்களைக் குவித்தது. சிறப்பாக பேட் செய்த நீஷம் 107 ரன்களுடனும், வாட்லிங் 89 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 174.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 508 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல் இன்னிங்ûஸ டிக்ளேர் செய்வதாக நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் அறிவித்தார்.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பென், ஷில்லிங்போர்டு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    தொடர்ந்து தனது முதல் இன்னிங்ûஸ விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 2ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களுக்கு 19 ரன்களை எடுத்துள்ளது. கெய்ல் 8 ரன்களுடனும், பவல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp