சுடச்சுட

  
  andy

  ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான அமிலி மெளரிஸ்மோவை தனது புதிய பயிற்சியாளராக பிரிட்டனின் ஆன்டி முர்ரே நியமித்தார்.

  தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீரர்களுள் முர்ரேவுக்கு மட்டுமே, வீராங்கனை ஒருவர் பயிற்சியாளராக உள்ளார்.

  மெளரிஸ்மோ, முன்னாள் நம்பர்-1 வீராங்கனையாவார். இவர் விம்பிள்டன் உள்ளிட்ட பல பட்டங்களை வென்றுள்ளார்.

  விம்பிள்டன் நடப்புச் சாம்பியனான முர்ரே, அப்பட்டத்தை தக்க வைக்கும் வகையில் தனது பயிற்சியாளரை மாற்றி உள்ளதாகத் தெரிகிறது.

  முர்ரேவின் இந்த நடவடிக்கை குறித்து ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரர் கூறுகையில், "இது மிகவும் ஆர்வமாக உள்ளது. மெளரிஸ்மோவாவின் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ரசித்துள்ளேன். அவர் சிறந்த வீராங்கனை. அதன் அடிப்படையில் முர்ரே சிறந்த ஒருவரை பயிற்சியாளராக நியமித்துள்ளார். முர்ரே-மெளரிஸ்மோ கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறேன்' என்று தெரிவித்தார்.

  12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பில்லி ஜீன் கிங் கூறுகையில், "ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். பயிற்சியாளர் யார் என்பது முக்கியமல்ல. அவருக்கும், வீரருக்கும் இடையேயுள்ள உறவுதான் முக்கியம்' என்றார்.

  18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரத்திலோவா கூறுகையில், "முன்னணி வீரர் ஒருவருக்கு வீராங்கனை ஒருவர் பயிற்சி அளிப்பது ஆர்வத்தை தூண்டுகிறது. இது, சிறந்த முடிவை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai