சுடச்சுட

    

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் 9ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.

    ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, 5 ஆட்டங்களில் விளையாடி ஓர் ஆட்டத்தில் வெற்றியும், ஓர் ஆட்டத்தை டிராவும் செய்தது. ஆனால், 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இதனால், 4 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

    8ஆவது இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் பின்னடைவைச் சந்தித்த இந்தியா, தற்போது 9ஆம் இடத்துக்கான ஆட்டத்தில், ஆசிய சாம்பியனான தென் கொரியாவுடன் மோதுகின்றது.

    பி பிரிவில் இடம் பிடித்திருந்த தென் கொரியாவும் 5ஆவது இடத்தில்தான் உள்ளது.

    ஆசிய கோப்பை இறுதிச்சுற்றில் தென் கொரியாவிடம் பெற்ற தோல்விக்கு இந்திய அணி தற்போது பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 8ஆவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai