சுடச்சுட

    

    சோச்சியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த் - கார்ல்ஸென் பலப்பரீட்சை

    By dn  |   Published on : 12th June 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஸ் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆனந்த் - கார்ல்ஸென் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சியில் நவம்பர் 7-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலிம்சினோவ் இந்த தகவலை புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இப்போட்டிக்கு சுமார் 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சோச்சி கிராமத்தில் போட்டிகள் நடைபெறும்.

    சோச்சியில் போட்டியை நடத்த ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்தும், நடப்பு சாம்பியனான கார்ல்ஸெனும் ஒப்புக் கொண்டனர். ரஷியா செஸ் கூட்டமைப்பு இந்த போட்டியை இணைந்து நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளடோவ் தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்தை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி கார்ல்ஸென் சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai