சுடச்சுட

  

  தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: தமிழகத்துக்கு இரண்டாவது வெற்றி

  By dn  |   Published on : 12th June 2014 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் நடைபெற்றுவரும் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் தமிழக அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

  கோவை, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் செவ்வாய்க்கிழமை துவங்கின. புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்:

  கர்நாடக அணி, ஹிமாச்சலப் பிரதேச அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-18 என்ற கோல் கணக்கில் ஹிமாச்சல அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி 9-22 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியிடம் தோல்வியடைந்தது. ஹரியானா அணியில் அதிகபட்சமாக சோனியா 6 கோல்களை அடித்தார்.

  மேற்கு வங்க அணி 13-19 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணியிடம் தோல்வியடைந்தது. சண்டிகர் அணியில் குஷ்பென் 6 கோல்களை அடித்தார். பஞ்சாப் அணி 23-11 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை வென்றது. பஞ்சாப் அணியில் அனுபீர் கெüர் 7 கோல்களை அடித்தார்.

  இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 22-6 என்ற கோல் கணக்கில் ஆந்திர அணியை வென்றது. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியின் ரஜினி பாலா 6 கோல்களை அடித்தார். மஹாராஷ்டிரா அணி 12-7 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வென்றது.

  புதுதில்லி 20-3 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியையும், ஹரியானா 25-20 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியையும் வென்றன.

  மத்தியப் பிரதேச அணி 11-18 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேச அணியிடம் தோல்வியடைந்தது. கர்நாடக அணி 21-12 என்ற கோல் கணக்கில் உத்தரப்பிரதேசத்தையும்,  தமிழக அணி 17-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியையும் வென்றன.

  பஞ்சாப் 20-11 என்ற கோல் கணக்கில் சண்டிகரையும், பிகார் 17-10 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தையும் வென்றன.

  சண்டிகர் 19-7 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும், ஜார்க்கண்ட் 25-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியையும், தில்லி 24-4 என்ற கோல் கணக்கில் உத்தரகண்ட் அணியையும் வென்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai