Enable Javscript for better performance
பிரேசில் - குரோஷியா: இன்று முதல் ஆட்டம்- Dinamani

சுடச்சுட

  

  பிரேசில் - குரோஷியா: இன்று முதல் ஆட்டம்

  By dn  |   Published on : 12th June 2014 12:58 AM  |   அ+அ அ-   |    |  

  neymar

  இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் சீனியர் டிவிஷன் கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒரு கால்பந்து பிரியரிடம் கேட்டபோது, "பிரேசில் அப்படி ஒன்றும் வலுவான அணி அல்ல, ஆனால், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால், அவர்கள் கோப்பையை வெல்லலாம்' என்றார்.

  1950 உலகக் கோப்பை இறுதிச் சுற்று. பிரேசிலும், அதன் அண்டை நாடான உருகுவேயும் யுத்தத்துக்கு தயாராக உள்ளன. பிரேசிலின் ரியா டீ ஜெனீராவில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஆட்டத்தைக் காண 1,73,850 கால்பந்து வெறியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கால்பந்து தங்கள் ரத்தத்தில் ஊறியது என்பதால் வெற்றி தங்களுக்கே என பிரேசில் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததுதானே விளையாட்டு. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.

  இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்குப் பின் பிரேசிலில் உலகக் கோப்பை நடைபெறுகிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் இம்முறை தன் சொந்த மண்ணில் மகுடம் சூட வேட்கையுடன் உள்ளது. அதற்கேற்ப கடந்த ஆண்டு நடைபெற்ற கான்ஃபெடரேசன் கோப்பை இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை 3-0 என வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

  2002ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வெல்ல முடியாத ஏக்கத்தில் இருக்கும் பிரேசில் அணி, ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் குரோஷியாவை எதிர்கொள்கிறது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததைப் போல இந்தமுறை பிரேசில் அணியின் இளம் வீரர் நெய்மர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  கால்பந்து குழு விளையாட்டு என்றாலும், நட்சத்திர வீரரின் மீதான எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காதுதானே? பார்சிலோனா கிளப் அணிக்காக முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டும் நெய்மருக்கு இந்த எதிர்பார்ப்பு ஒருவித நெருக்கடியைக் கொடுக்கும். இதேயேதான் பீலேவும் தெரிவித்துள்ளார். அவரது வார்த்தைகளில் சொல்வதானால், "நெய்மர் இளம் வீரர். அனைத்துக்கும் அவரே பொறுப்பு என்ற ரீதியிலான நெருக்கடி அவர் மீது திணிக்கப்பட்டுள்ளது' என்றார்.

  மேலும் பீலே தன் அணி நிலவரம் குறித்து கூறுகையில் "வரலாற்றில் முதன்முறையாக பிரேசில் அணியின் டிஃபன்ஸ் முன்களத்தை விட வலுவாக உள்ளது. நடுகளமும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

  பீலேவின் வார்த்தைகளை பிரேசில் அணியின் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் கார்லெஸ் ஆல்பெர்டோ பெரேரிரா வழிமொழிகிறார். "ஆறாவது முறையாக பிரேசில் சாம்பியன் பட்டம் வெல்லும். உலகிலேயே எங்கள் தற்காப்புதான் சிறப்பாக உள்ளது' என்றார் ஆல்பெர்டா. அவர் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணியின் நம்பர் - 1 டிஃபண்டரான தியாகோ சில்வா மற்றும் டேவிட் லூயிஸ் போன்ற சிறந்த பின்கள வீரர்கள் இருப்பது பிரேசில் அணிக்கு வலு சேர்க்கும்.

  எனவே, பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான முதல் அடியை வெற்றியுடன் எடுத்து வைக்கும் என நம்பலாம்.

   

  பிரேசில் அணி

  கோல் கீப்பர்கள்: ஜூலியா சீஸர், ஜெஃபர்சன், விக்டர்.

  பின் களம்: டேன்டி, டேவிட் லூயிஸ், ஹென்றிக், தியாகோ சில்வா, டேனியல் ஆல்வ்ஸ், மெய்கன், மார்செலோ, மேக்ஸ்வெல்.

  நடுகளம்: ஃபெர்ணான்டினோ, ஹெர்னனஸ், லூயிஸ் கட்சவோ, ஆஸ்கர், பாலினோ, ரமிர்ஸ், வில்லியம்

  முன்களம்: பெர்னார்டு, ஃபிரெட், ஹல்க், ஜோ, நெய்மர்.

   

  குரோஷியா அணி

  கோல் கீப்பர்கள்: ஸ்டைப் பிளெடிகோஸô, டேனிஜெல் சுபேஸிக், ஆலிவர் ஜெலினிகா

  பின்களம்: டர்ஜோ ஸ்ர்னா, டொமகோஜ் விடா, சிம் விர்சல்ஜ்கோ, டேனியல் பிரஞ்சிக், வெர்டன் கர்லுகா, டெஜன் லோவ்ரன், கார்டன் ஸ்சைல்டென்ஃபெல்டு.

  நடுகளம்: லூகா மாட்ரிக், இவன் ரேகிடிக், மேடோ கோவசிக், மார்சிலோ பிரோஜோவிக், ஆக்ஜென் உகோஜெவிக், இவன் மோசினிக், சமிர்.

  முன்களம்: மரியோ மேண்ட்சுகிக், நிகிகா ஜெலவிக், இவிகா ஒலிக், உல்ஃப்ஸ்பர்க், எடுவர்டோ ட சில்வா, இவன் பெரிசிக், ஆன்டி ரெபிக்.

   

  அணிகள் மற்றும் பிரிவுகள்

  பிரிவு ​ ஏ​

  பி‌ரே​சி‌ல்

  கு‌ரோஷியா

  ‌மெ‌க்​ஸி‌கோ

  ‌கேம​ரூ‌ன்​

   

  பிரிவு பி​

  ​‌ஸ்‌பெ​யி‌ன்

  ‌நெத‌ர்​ல‌ா‌ந்‌து

  சிலி

  ஆ‌ஸ்​தி​‌ரே​லியா​

   

  பிரிவு சி​

  கொல‌ம்​பிய‌ா

  கி‌ரே‌க்​க‌ம்

  ஐவரிகோஸ்‌ட்

  ஜ‌ப்​பா‌ன்​

   

  பிரிவு டி

  உருகுவே

  கோஸ்டா ரிகா

  இங்கிலாந்து

  இத்தாலி

   

  பிரிவு ஈ

  ஸ்விட்சர்லாந்து

  ஈகுவேடார்

  ஃபிரான்ஸ்

  ஹோண்டுராஸ்

   

  பிரிவு எஃப்

  ஆர்ஜெண்டினா

  போஸ்னியா-ஹெர்சிகோவினா

  ஈரான்

  நைஜீரியா

   

  பிரிவு ஜி

  ஜெர்மனி

  போர்ச்சுகல்

  கானா

  அமெரிக்கா

   

   பிரிவு எச்

  பெல்ஜியம்

  அல்ஜீரியா

  ரஷியா

  தென் கொரியா

  kattana sevai