சுடச்சுட

  

  உலகமே எதிர்பார்க்கும் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

  முன்னதாக தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரேசிலின் பாரம்பரிய நடனம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடக்க விழாவை உலகம் முழுவதும் இருந்து 300 கோடி பேர் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தனர்.

  நடப்பு சாம்பியனான ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆர்ஜெண்டினா ஆகிய அணிகள் கோப்பை வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. நட்சத்திர வீரர்களான ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலைச் சேர்ந்த இளம் வீரர் நெய்மர் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் முத்திரை பதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  அதிக முறை உலகக் கோப்பையில் விளையாடிய நாடு பிரேசில் (19 முறை)

  ஆர்ஜெண்டினாவில் இரண்டாவது மரடோனோ என பலர் இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், மெஸ்ஸி மட்டுமே என்னை ஒத்திருப்பதாகக் கருதுகிறேன். ஸ்பெயினில் 1982-இல் என் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல 2010-இல் மெஸ்ஸி மீது எதிர்பார்ப்பு இருந்தது. 1986-இல் நான் அணிக்கு தலைமை ஏற்றேன். தற்போது மெஸ்ஸி கேப்டனாக உள்ளார். 1986-இல் உலகக் கோப்பையை நாங்கள் வென்றோம். அதன்பிறகு தற்போதுதான் நாம் மகுடம் சூடும் நேரம் கணிந்துள்ளது. உன்னால் முடியும் மெஸ்ஸி. ஆர்ஜெண்டினாவுக்காக சாம்பியன் பட்டம் வென்று கொடு. மீதமுள்ள உன் வாழ்க்கை முழுவதும் நாட்டு மக்கள் உன்னை ஆராதிப்பர்.

  மாரடோனா, ஆர்ஜெண்டினா முன்னாள் கால்பந்து வீரர்.

   

  கால்பந்து ஆடும் நாடு என்ற பெருமை பெற்றிருந்தபோதிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ஜெண்டினா பெரிய அளவிலான தொடர்களில் வெற்றிபெறவே இல்லை. எனவே பிரேசிலில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்கள் வீதிகளில் உலகக் கோப்பை வென்ற உற்சாகத்தை பார்க்கவில்லை. காதால் மட்டுமே கேட்டுள்ளேன். கோப்பை வென்று அந்த கொண்டாட்டத்தை நேரில் பார்த்தால் அது சிறப்பாக இருக்கும். ஆனால், உலக சாம்பியன் பட்டம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

  மெஸ்ஸி, ஆர்ஜெண்டினா கேப்டன்.

   

  இத்தாலி அணியின் பயிற்சியாளர் சீசர் பிரண்டலியின் அணி கோப்பை வெல்வதற்கான அனைத்து தகுதியையும் பெற்றுள்ளது. பிரண்டலி எதிரணியின் பலம், பலவீனத்தை நன்கு புரிந்து வைத்திருப்பவர். கால்பந்தை தந்திரமாக விளையாடுவது எங்களுக்குப் பிடித்தமான ஒன்று. நாங்கள் இதுவரை நான்கு முறை உலகக் கோப்பை வென்றுள்ளோம். எதிரிகளுக்கும் அது தெரியும். இந்த முறை இத்தாலி கோப்பை வென்று, தென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  ஃபிரான்கோ பேரஸி, இத்தாலி முன்னாள் வீரர்

   

  ஃபிஃபாவின் பாதையில்...

  அதிக முறை உலகக் கோப்பையை வென்ற நாடு

  பிரேசில் (5 முறை).

  அதிக முறை உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள்

  ஆண்டனி கர்பஜல் (மெக்ஸிகோ) : 5 முறை (1950 - 1966)

  லோதர் மேத்யூஸ் (ஜெர்மனி) : 5 முறை (1982-1998)

   

  உலகக் கோப்பைகளை வென்ற அணிகள்

  பிரேசில், உருகுவே, ஜெர்மனி, ஸ்பெயின்

  இங்கிலாந்து, இத்தாலி, ஃபிரான்ஸ், ஆர்ஜெண்டினா

   

  ஓர் உலகக் கோப்பையில்

  அதிக கோல்களை அடித்த வீரர்

  ஜஸ்ட் ஃபோன்டெய்ன் (ஃபிரான்ஸ்)

  - 13 கோல்கள் (1958)

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai