சுடச்சுட

  
  rona

  குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணி ஞாயிற்றுக்கிழமை தனது முதல் ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்கொள்கிறது. இதற்காக ஆர்ஜெண்டினா அணி கடந்த புதன்கிழமை பிரேசிலின் பெலே ஹரிசான்ட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அதை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஓட்டம் உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் சிறிதுநேரம் ரிலாக்ஸôக இருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் மெஸ்ஸி அருகே வந்தார். பிரேசிலின் முன்னாள் வீரரான ரொனால்டினோவைப் போல இருந்த அவரைப் பார்த்ததும் மெஸ்ஸி வியந்தார். மெஸ்ஸியும், கால்பந்தில் மாயவித்தை காட்டும் ரொனால்டினோவும் பார்சிலோனா அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  அதனால்தான் ரொனால்டினோ உருவத்தை ஒத்திருந்த அவரிடம் மெஸ்ஸி பேச்சுக் கொடுத்தார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.

  அதேபோல பத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்குள் ஊடுருவினர். அதில் ஒருவர் மெஸ்ஸியின் ஷூவை துடைத்தார். சிலர் பயிற்சியில் ஈடுபட்ட பந்துகளை எடுத்துச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai