சுடச்சுட

  
  ronaldo1

  நாடு என்ற அடிப்படையில் பார்க்கும்போது பிரேசிலுக்கு நெய்மரை விட, ஆர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸியை விட, போர்ச்சுகலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக முக்கிய நபராகத் திகழ்கிறார். தனது நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் பெரும் சுமையுடன் பந்தை துரத்திக் கொண்டு பிரேசிலில் ஓட உள்ளார். அவரைப் பற்றி அறியாத சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

   

  கிறிஸ்டியானோ ரொனால்டோ

  * அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மீது தீராத பற்று கொண்ட அவரது பெற்றோர், இந்தப் பெயரை அவருக்கு சூட்டியுள்ளனர்.

  * அவரின் முழுப்பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ டாஸ் சான்டோஸ் ஏவிரோ.

  * 17 வயதில் கிளப் அணியில் களம் புகுந்த இவர், 2 கால்களிலும் பந்தை வேகமாகக் கடத்திக் கொண்டு செல்வதில் சூரர்.

  * மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கு விளையாடி 6 ஆண்டுகளில் 9 கோப்பைகளை வென்றார். அதன்பின், சர்வதேச அளவில் ஜொலிக்கத் தொடங்கினார்.

  * 2009இல் 134 மில்லியன் டாலர் மதிப்பில் ரியல் மாட்ரிட் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பும், அவரது கோப்பை வெல்லும் தாகம் தணியவில்லை.

  *ரொனால்டோவின் செல்லப்பெயர் சிஆர்7. தனது பெயரின் முதல் எழுத்துகளுடன், சீருடை எண்ணை இணைந்து இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

  * களத்தில் ஆக்ரோஷத்துடன் விளையாடும் இவர், களத்துக்கு வெளியே கருணையுடன் நடந்து கொள்கிறார். தான் ஈன்ற பல கோடி ரூபாய்களை நற்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

   

  நம்பிக்கைகள்

  சிறந்த வீரர் எனும்போதும், தனக்குள் சில நம்பிக்கைகளைக் கொண்டுள்ளார் ரொனால்டோ. அதன்படி நடந்தால் வெற்றி கிடைப்பதாக அவர் நம்புகிறார் போலும். அது என்னவென்று பார்ப்போம்.

  1. மைதானத்துக்கு பஸ்ஸில் பயணிக்கும்போது கடைசி இருக்கையில்தான் அமர்வார். அனைவரும் இறங்கிய பிறகுதான் பஸ்ûஸ விட்டு கீழே இறங்குவார்.

  2. விமானத்தில் பயணிக்கும்போது சக வீரரான பெப் அருகேதான் அமர்வார். ஆனால், முதல் ஆளாக விமானத்தை விட்டு கீழே இறங்கி விடுவார்.

  3. கால்பந்து ஆட்டத்தின் இடைவேளைக்குப் பிறகு தனது சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வார்.

  4. மைதானத்துக்குப் புறப்படும் முன், ஓய்வு அறையிலேயே முதலில் பந்தைத் தொடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.

  5. போர்ச்சுகல் அணியில் ரொனால்டோவுக்கு மட்டுமே, முழுக்கை அளவிலான சீருடை அணிந்து விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  6. மைதானத்துக்குள் நுழையும்போது வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பார்.

  7. ஆட்டத்தில் முதல் கோல் அடித்தால், அதனை தனது குடும்பத்துக்கு பரிசளிப்பார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai