சுடச்சுட

  

  * 2002 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் முதல் ஆட்டத்தில் செனகல் அணியிடம் மோசமாக தோல்வியடைந்ததைப் போல தற்போது நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

  *1963-இல் ஸ்காட்லாந்திடம் ஸ்பெயின் அணி 6-2 என தோல்வியடைந்தது. அதன்பின் தற்போது, முதன்முறையாக சர்வதேச அளவிலான போட்டிகளில் எதிரணிக்கு 5 கோல்கள் அடிக்க வாய்ப்பளித்துள்ளது.

  * 1962-ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக சிலி அணி 3 கோல்களை அடித்துள்ளது.

  * நெதர்லாந்தின் ராபின் வேன் பெர்ஸி கடைசியாக ஆடிய 9 ஆட்டங்களில் 10 கோல்கள் அடித்துள்ளார்.

  * பிரேசிலில் கடைசியாக நடைபெற்ற 2 சர்வதேச போட்டிகளிலும் ஸ்பெயின் தோல்வியடைந்தது.

  * 2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் வாங்கிய மொத்த கோல்களின் எண்ணிக்கை 3. இந்த தொடரில் முதல் ஆட்டத்திலேயே 5 கோல்களை வாங்கி விட்டது.

  * ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டங்களில் முதல் பாதியில் கோல் அடித்த முதல் வீரர் பெர்ஸி.

  * உலகக் கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் ஆகிய இரு தொடர்களின் வெள்ளை நிற உடை அணிந்து ஆடிய எந்த ஆட்டத்திலும் ஸ்பெயின் வெற்றிபெற்றதே இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai