சுடச்சுட

    
    sport1

    ராபின் வேன் பெர்ஸி மற்றும் ஆர்ஜன் ராபின் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்து கைகொடுக்க 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தியது நெதர்லாந்து. அத்துடன், கடந்த உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஸ்பெயினிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

    பிரேசிலின் சால்வடார் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. கேசில்லாஸ், செர்ஜியா ரமோஸ், ஜெரார்டு பீக்கே, ஆண்ட்ரஸ் இனீஸ்டா, ஷேவி, ஹெரண்டஸ் மற்றும் டீகோ கோஸ்டா என நட்சத்திர பட்டாளத்துடன் இருந்த ஸ்பெயின் நெதர்லாந்தை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆட்டத்தின் 27 நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை சரியாகப் பயன்படுத்திய ஷேவி அலோன்சா கோலாக மாற்றினார். பின் வழக்கம்போல ஸ்பெயின் அணி "டிக்கி டாக்கா' யுத்தியைக் கையாண்டது. இடைவேளை முடிவதற்கு 1 நிமிடத்துக்கு முன்பு மைதானத்தின் பாதியில் இருந்து கிடைத்த "லாங் ரேஜ்' பாûஸ அற்புதமாக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோலடித்தார் ராபின் வேன் பெர்ஸி.

    இது இந்த உலகக் கோப்பையின் ஆகச் சிறந்த கோலாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது. இந்த அசத்தல் கோல் மூலம் முதல் பாதியில் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.

    இரண்டாவது பாதியில் நெதர்லாந்தின் "கால்' ஓங்கியது.

    ஸ்பெயின் அணியின் பலவீனம் என கருதப்படும் டிஃபன்ûஸ தனி நபர் ஆளுமையின் மூலம் உடைத்தனர் நெதர்லாந்து வீரர்கள். விளைவு, ஆர்ஜன் ராபின் மற்றும் பெர்ஸி இருவரும் தலா இரண்டு கோல்களை அடித்தனர். மற்றொரு வீரர் ஸ்டெஃபன் டி விரிஜ் கார்னர் கிக்கை வலைக்குள் செலுத்தினார். இதனால் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

    கோஸ்டா ஏமாற்றம்: ஸ்பெயின் அணிக்கு கோல் அடிக்கவல்ல முன்கள வீரர் இல்லை. அந்த அணி டீகோ கோஸ்டாவை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது என கணிக்கப்பட்டது. ஆனால், பிரேசிலில் பிறந்து ஸ்பெயினுக்காக ஆட வந்த கோஸ்டாவும் எந்த மாயாஜலமும் நிகழ்த்தவில்லை.

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது சிலி

    கியியுபாவில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவினருக்கான ஆட்டத்தில் சிலி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் சிலி அணி வெற்றி பெற்றது. சிலி அணியின் சான்செஸ் (12-வது நிமிடம்), வல்டிவா (14-வது நிமிடம்), பியூசிஜர் (90-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு சஹில் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். சிலி தனது அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணிக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

     

    கோல்கள் விவரம்

     

    ஸ்பெயின்

    அலோன்சா - பெனால்டி கிக்கை கோலாக்கினார் (27-வது நிமிடம்)

    நெதர்லாந்து

    1. ராபின் பெர்ஸி 15 யார்டு தூரத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோலடித்தார். (44-வது நிமிடம்)

    2. ஆர்ஜென் ராபென் ஸ்பெயின் டிஃபண்டர்கள், கோல்கீப்பரை ஏமாற்றி அசத்தல் கோலடித்தார் (53-வது நிமிடம்)

    3. கார்னர் கிக்கை ஸ்டெஃபன் டி விரிஜ் கோலாக்கினார்(64-வது நிமிடம்).

    4. ஸ்பெயின் கோல் கீப்பர் அஜாக்கிராதையாக இருந்ததை சாதகமாக்கினார் பெரிஸ் (72)

    5. ஜெரார்டு பீக்கே, ரமோஸ் ஆகியோரை ஏமாற்றி பந்தை வலைக்குள் செலுத்தினார் ராபின் (80-வது நிமிடம்).

     

    எதிரும்... புதிரும்...

     

    ஸ்பெயினுக்கு பெனால்டி கிடைத்ததும், கடந்த உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தோற்றது போல தோற்று விடுவோமோ என பயந்தேன். பெர்ஸி அடித்தது அழகான கோல். அது கோலாகும் என யூகித்திருந்தேன். ஏனெனில் கோல் கீப்பர் முன்னால் வந்து விட்டதால், ராபின் அதை நிச்சயம் கோலாக மாற்றுவார் எனத் தெரியும். நடப்பு சாம்பியனை வீழ்த்திய தருணம் மிகவும் உன்னதமானது. ஸ்பெயினை இப்படி வீழ்த்துவோம் என நாங்கள் யாரும் நினைக்கவே இல்லை.

    வான் கால், நெதர்லாந்து பயிற்சியாளர்.

     

    நாங்கள் கடுமையாக போராடினோம். வலுவான உடல்வாகுடன் இருந்த நெதர்லாந்து அணியினர் ஆட்டத்தையும் தங்களுக்கு வலுவாக மாற்றிக் கொண்டனர். எங்களுக்கு இது மிகவும் இக்கட்டான சூழல்.

    தோல்வியில் இருந்து மீண்டு சிலிக்கு எதிரான அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

     

    வின்சென்ட் டெல் போஸ்க், ஸ்பெயின் பயிற்சியாளர்.

     

    எங்கள் அணி இளமையும், திறமையும் நிறைந்தது. இதை நினைத்து பெருமைப்படுகிறேன். இது ஆரம்ப நிலைதான், எனவே இதை பழிவாங்கும் ஆட்டமாகக் கருதவில்லை. இந்த வெற்றியின் மூலம் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதை சாதகமாக வைத்து அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும். 2010 உலகக் கோப்பை எங்களுக்கானது அல்ல. எனவே தலையைத் தாழ்த்தி காத்திருக்கிறோம் எங்கள் வாய்ப்புக்காக.

    ஆர்ஜென் ராபின், நெதர்லாந்து முன்கள வீரர்.

     

     

    முடிவு இதுபோல அமைந்த பின் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது. அடுத்த ஆட்டத்தைப் பற்றி சிந்திப்போம்.

    இந்த பின்னடைவை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும், உலகக் கோப்பையில் இப்படி எல்லாம் நடப்பது சகஜம்தான். பாராட்டும்படியோ, விமர்சிக்கும்படியோ நாங்கள் ஆடவில்லை.

    அடுத்த இரண்டு ஆட்டங்களில் வென்றால் நாங்கள் பந்தயத்தில் இருப்போம்.

     

    இனிஸ்டா, ஸ்பெயின் நடுகள வீரர்.

     

    அது என்ன டிக்கி டாக்கா?

     

    அருகருகே பாஸ் செய்து, பெரும்பான்மையான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்கே டிக்கி டாக்கா என்று பெயர். இந்த யுத்தியை ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா கிளப் அணிதான் பின்பற்றுகின்றன. ஜோகன் கிரயுஃப் தொடங்கி வைத்த இந்த ஃபார்முலா தற்போதுள்ள ஸ்பெயின் மேலாளர் வின்சென்ட் டெல் போஸ்க் வரை பின்பற்றப்படுகிறது. டிக்கி டாக்காவின் மூலம்தான் ஸ்பெயின் கடந்த முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்றது. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இந்த யுத்தி வேலை செய்யாததால் டிக்கி டாக்கா செயலிழந்து விட்டதாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால் ஸ்பெயின் வீரர் ஷேவி கூறுகையில் "தோற்றாலும், ஜெயித்தாலும் டிக்கி டாக்காவை நாங்கள் கைவிடப்போவதில்லை' என்றார்.

     

    டுவிட்டர் குரல்...

     

    கிரிக்கெட் போட்டி நடக்கும்போது டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வர். அதுபோலவே நள்ளிரவு 1 மணிக்கும் கண் விழித்து உலகக் கோப்பை கால்பந்து குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து கால்பந்து மீதான மோகத்தை பதிவு செய்து விட்டனர் தமிழ் டுவிட்டர்கள். சில சுவாரஸ்ய டுவிட்டுகள் இதோ.

    *ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலஸ் தன் வாழ்நாளில் சந்தித்த மோசமான தோல்வி இது.

    * டிக்கி-டாக்காவின் காலம் முடிந்தது என்பதை இந்த ஆட்டத்தின் மூலமும் , பார்சிலோனவின் சறுக்களின் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

    *ஐந்து கோலுமே திறமையாக அடிக்கபட்ட தனித்துவம் வாய்ந்த கோல்கள்

    * நாலு வருஷ பாக்கி...நாலுக்கு அஞ்சு கோலா குடுத்தாச்சு...

    *கல்லணையாக இருந்த கேசிலஸ் 5 கோல்களைக் கசிய விடுவாரென்று ராபின் வேன் பெர்ஸி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். 5-1 பழி தீர்ந்ததா?

    *ஆப் சைடு கஷ்டம்னா லெக் சைடுல போய் போட வேண்டியதுதானே அப்பாவி கிரிக்கெட் வெறியர்கள்

    *நோபால்ல விக்கெட் விழுந்தமாதிரி ஆகிப்போச்சு. ப்ச். பெட்டர்லக் நெக்ஸ்ட்-டைம் ஸ்பெயின்.

    *ஸ்பெயின் ரசிகர்கள் கலங்க வேண்டாம் போன முறையும் இதே மாதிரி முதல் மேட்ச் தோத்தாங்க

    *ரெஃப்ரி செய்ற ஒரே உருப்படியான வேலை இவங்களுக்கு பஞ்சாயத்து பண்றதுதான். எல்லாம் ரவுடிப்பயலுக. :-))))

    *டிக்கி டாக்கா எனும் குறுகிய பாஸ்களை லாங் ரேஜ் பாஸ்களின் மூலம் உடைத்தெறிந்தது நெதர்லாந்து.

    *பிரேசிலை விட்டு ஸ்பெயினுக்கு ஆடச் சென்ற டீகோ கோஸ்டாவுக்கு ரூம் போட்டு குடுத்தாச்சா. பயபுள்ள அழுது தீக்கட்டும்.

    *கிரீஸ் டப்பாவ எப்படி உதச்ச. (நெதர்லாந்து ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்)

    *நெஹ்ரா கோல் கீப்பரா இருந்தா எப்பிடி இருக்கும். (கொடூரசிந்தனைகள்)

    *மீன் மாதிரி பாய்ஞ்சு போட்டான்யா கோல்.....

    *கிரிக்கெட்டில் ஃபீல்டிங் மற்றும் த்ரோயிங்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மிகச்சிறந்த விளையாட்டு கால்பந்து

    *வேர்லட் கப் வாங்கறானுகளோ இல்லையோ. ஸ்பெயின் ஆஸ்காரை வாங்கிருவானுக. என்னா நடிப்புடா டேய்.

    *முதல் கோல் போட்றவரை எந்த கலர் சட்ட, எந்த நாடுன்னு தெரியாம... உஸ்ஸ்.

    *ஸ்பெயின் ஆதிக்கம்தான் அதிகம். ஒருவழியா கோல் போட்டாங்க. இப்ப நெதர்லாந்து முரட்டு ஆட்டத்த ஆரம்பிப்பானுவ.

     

     

    நெய்மரின் பெனால்டி ஷாட் மெச்சும்படி இல்லை. பந்து கோல் கீப்பரின் இரண்டு கைகளிலும் பட்டுதான் வலைக்குள் விழுந்தது. மரியோ மேண்டஸþகிச் இல்லாமல் ஏற்கெனவே ஊனமாக இருந்த குரோஷியாவை ஆஸ்கரின் ஷாட் பின்னுக்குத் தள்ளி விட்டது.

     

    மரடோனா, கால்பந்து ஜாம்பவான்.

     

    எல்லா புகழும் பயிற்சியாளருக்கே. இது அவரது யுத்தி. ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து விட்டார். நான் அடித்த கோல்களில் இதுதான் சிறப்பானது.

     

    பெர்ஸி, நெதர்லாந்து வீரர்.

     

    பெர்ஸி

    கோல்கள் - 2

    மொத்த ஷாட் - 4

    இலக்கை நோக்கிய

    ஷாட் - 3

    பாஸ் - 24

    பந்தை உதைத்தது - 34

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai