சுடச்சுட

  
  roon

  பிரேசிலில் அமேசான் காடுகள் நிறைந்த மனாஸ் நகரில் 15லிம் தேதி அதிகாலை நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலியும், இங்கிலாந்தும் மோதவுள்ளன. இரு அணிகளும் இதற்கு முன் 2012லிஇல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி வெற்றி பெற்றது.

  இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரூனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி அமையும். "எங்களிடம் நிறைய சக்தி உள்ளது. துடிப்பு மிக்க வீரர்கள் நிறைந்துள்ளனர். எல்லாம் சரியாக அமைந்து விட்டால் எதிரணிக்கு கடும் சவால் அளிப்போம். சர்வதேச ஆட்டம் என்று வந்து விட்டால் தாக்குதல் ஆட்டம்தான் சிறந்தது. இதில் நாங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்' என ரூனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் தவிர்த்து, லெஃப்ட் பேக் லூக் ஷா, நடுகள வீரர் ராஸ் பர்க்லே உள்ளிட்ட வீரர்களும் ஜொலிப்பர் என எதிர்பார்க்கலாம்.

  இத்தாலி அணியின் நடுகள வீரர் ஆண்ட்ரியா பிர்லோ இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி விடுவோம் என சவால் விடுத்துள்ளார். அவர் கூறுகையில் "இங்கிலாந்து வலுவான அணி எனத் தெரியும். இருப்பினும் அவர்களை சந்திக்க தயார். ஏனெனில் கடந்த சில மாதங்களாக அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.

  குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளும் முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க நினைக்கும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai