சுடச்சுட

    

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 9ஆவது இடத்தை பிடித்தது. நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 9ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தியது.

    இந்த ஆட்டம் முழுவதும் சர்தார் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அணி தனது கோல் கணக்கை 6ஆவது நிமிடத்திலேயே தொடங்கியது. அந்த கோலை அக்ஷதீப் சிங் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 43 மற்றும் 49ஆவது நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்தனர்.

    வெற்றி குறித்து சர்தார் சிங் கூறுகையில், "இத்தொடரை நாங்கள் சிறப்பாகத் தொடங்கினோம். அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரைவிலேயே அவர்கள் கற்றுக் கொண்டனர். கொரியாவை வீழ்த்தியது அற்புதமானது. இதே செயல்பாட்டை ஆசிய கோப்பை தொடரிலும் வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

    இத்தொடரில் 5ஆவது இடத்தைப் பிடிக்க முயற்சி செய்வோம் என்று சர்தார் சிங் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால், இறுதியில் 9ஆவது இடத்தை மட்டுமே இந்திய அணியினால் பிடிக்க முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai