சுடச்சுட

  
  nishi

  பிரேசிலுக்கு ஆதரவாக பெனால்டி கிக் வழங்கியது, நெய்மருக்கு சிவப்பு அட்டை காண்பிக்காமல் மஞ்சள் அட்டை காட்டியது என முதல் ஆட்டத்திலேயே சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது இந்த உலகக் கோப்பை.

  குரோஷியா வீரர் லூகா மாட்ரிக்குடன் மோதிய நெய்மருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும் என்றும் பிரேசில் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை மட்டுமே காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  நடுவரின் இந்த 2 செயல்களும் பிரேசிலின் வெற்றியை எளிதாக்கி விட்டது. நெய்மருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தபோது குரோஷியா 1லி0 என முன்னிலையில் இருந்தது. அவருக்கு சிவப்பு அட்டை கொடுத்திருந்தால் முன்னணி வீரர் இல்லாமல் பிரேசில் தடுமாறி இருக்கும் என்ற வாதமும் எழுந்துள்ளது.

   

  நடுவர் மீது விமர்சனம்: எது எப்படியோ, 2010இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் நடுவராகப் பணியாற்றிய நிஷிமுராவுக்கு அவரது சொந்த நாட்டு ரசிகர்களே எதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர். சமூக இணையதளங்களில் நிஷிமுராவுக்கு பிரேசில் சீருடை அணிவித்தும், அவரை பிரேசில் வீரர் போல பாவித்தும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai