சுடச்சுட

  
  rain

  இந்தியா- வங்கதேசத்துக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

  இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு தயாராகும் விதமாக வங்கதேச சுற்றுப் பயணத்துக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்தது. ஆனால், இந்த தொடரில் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏழு பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்திய ராபின் உத்தப்பா, அக்ஷர் படேல், பர்வேஸ் ரசூல், மனோஜ் திவாரி உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இளம் படைக்கு சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்றுள்ளார். முதல் ஆட்டத்தை முன்னிட்டு இந்திய அணி சனிக்கிழமை பயிற்சி மேற்கொண்டது. தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்த கிரிக்கெட் தொடருக்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால், இந்திய - வங்கதேச கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை. இதற்கு முக்கிய வீரர்கள் பங்கேற்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  இதையெல்லாம் கடந்து ரெய்னாவின் படை முதல் ஆட்டத்தில் வெற்றிபெறுமா என கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai