சுடச்சுட

  
  ten

  புல் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனுக்கு, ஒத்திகை பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் போட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2ஆவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

  ஜெர்மனியில் ஹாலே வெஸ்ட்ஃபேலன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டஸ்டின் பிரெüனுடன் மோதினார் நடால். களிமண்ணில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்ற நடாலுக்கு, புல்தரை சாதகமான சூழலை ஏற்படுத்தவில்லை. அதனால், போட்டி அளிக்காமல் தோற்பதைப் போல, 6லி4, 6லி1 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

  தோல்வி குறித்து நடால் கூறுகையில், "ஆட்டம் குறித்து என்ன கூறுவது என்று தெரியவில்லை. விம்பிள்டனுக்கு தயார் செய்யும் வகையில் இந்தப் போட்டி தரமானது இல்லை. தற்போது ஸ்பெயின் திரும்ப உள்ளேன். அங்கு போட்டியில் கலந்துகொள்வேனா என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், விம்பிள்டனுக்கு முன் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது' என்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6லி7, 6லி4, 6லி2 என்ற நேர் செட்களில் போர்ச்சுகலின் ஜோவா செüஸாவை வீழ்த்தினார்.

  வாவ்ரிங்கா முன்னேற்றம்: லண்டனில் நடைபெற்று வரும் குயின்ஸ் டென்னிஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6லி2, 6லி2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

  இத்தொடரும் புல்தரை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற 3ஆவது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே தோல்வி அடைந்தார்.

  விம்பிள்டன் நடப்புச் சாம்பியனான முர்ரேவுக்கு இது பின்னடைவு. இவர், செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக்கிடம் 7லி6, 6லி2 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai