சுடச்சுட

  
  cample

  உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டா ரிகா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் ஃபார்டேஸாவில் நடைபெற்றது. நட்சத்திர வீரர் செளரஸ் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. இது இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள உருகுவே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் உருகுவேக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை எடின்சன் கேவனி கோலாக்கினார்.

  ஆனால், 2-வது பாதியில் சுதாரித்த கோஸ்டா ரிகா அணியினர் 3 கோல்கள் அடித்து உருகுவேயை திணறடித்தனர். கோஸ்டா ரிகா அணி சார்பில் கேம்ப்பெல் (54-வது நிமிடம்), டுவார்டே (57), யூரினா (84) ஆகியோர் கோல் அடித்தனர்.

  முதல் சிவப்பு அட்டை: ஆட்டம் முடிவதற்கு நான்கு நிமிடங்கள் இருந்தபோது உருகுவே வீரர் மேக்ஸி பெரீரா வேண்டுமென்றே, கோல்டா ரிகாவின் கேம்ப்பெல்லின் காலைத் தட்டி விட்டார்.

  இதனால் பெரீராவுக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலகக் கோப்பையில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட முதல் வீரர் பெரீரா என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai