சுடச்சுட

  
  football1

  ஐவரி கோஸ்ட் அணி 99 வினாடி இடைவெளிக்குள் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் வேகமாக அடிக்கப்பட்ட கோல்கள் இதுவாகும்.

  ரெசிஃபே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஹோண்டா ஒரு கோல் அடித்து ஜப்பான் அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். ஆனால் பிற்பாதியில் சுதாரித்த ஐவரி கோஸ்ட் அணிக்கு போனி 64-வது நிமிடத்திலும், கெர்வினோ 66-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

  ஜப்பானியர்கள் அதிர்ச்சி: இந்த ஆட்டத்தைக் காண ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட ஸ்கிரீன் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஜப்பான் தோல்வியடைந்ததும் இதைத் தாங்க முடியாமல் ரசிகர்(கை)கள் கதறி அழுதனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai