சுடச்சுட

  
  robin

  வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிர்பூரில் ஞாயற்றுக்கிழமை தொடங்கியது.

  டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முஷ்ஃபிகுர் ரஹிம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 52 ரன்களும், மஹமதுல்லா 41 ரன்களும் எடுத்தனர்.

  அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இந்திய அணி 16.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு, 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின் ஆட்டம் தொடங்கியபோது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி 26 ஓவர்களில் 153 ரன்கள் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

  தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 50 ரன்களும், ரஹானே 64 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  அடுத்த ஆட்டம் ஜூன் 17-ம் தேதி டாக்காவில் நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai