சுடச்சுட

  

  * போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டம், ஜெர்மனியின் நூறாவது உலகக் கோப்பை ஆட்டமாகும். இதுவரை விளையாடியுள்ள 99ஆட்டங்களில் 60இல் வெற்றியும், 19இல் டிராவும், 20இல் தோல்வியையும் அந்த அணி தழுவியுள்ளது.

  * சரியாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது உலகக் கோப்பை கோலை அடித்துள்ளார் ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸி. 16-06-2006 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்  தனது முதல் கோலை அடித்திருந்தார்.

  * 1950ஆம் ஆண்டு முதல் பிரிவு வகையில் தொடங்கிய உலகக்கோப்பையின் முதல் ஆட்டம் இதுவரை டிராவானதில்லை.

  * தென் அமெரிக்காவை (ஈகுவேடார்) சேர்ந்த ஓர் அணியை உலகக் கோப்பையில் முதன் முதலாக ஸ்விட்சர்லாந்து தற்போதுதான் வீழ்த்தி உள்ளது.

  * இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஈகுவேடார் அணி, அனைத்திலும் தோல்வியையே அடைந்துள்ளது.

  * உலகக் கோப்பையின் 9 ஆட்டங்களில் 5இல் முதலில் கோல் வாங்கிய அணி வெற்றி பெற்றுள்ளது.

  * 1998ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, நடைபெற்ற 3 உலகக் கோப்பை போட்டியிலும் முதல் ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இந்த மோசமான சாதனையை ஹோண்டுராஸூக்கு எதிரான ஆட்டத்தில் தற்போது அந்த அணி வீரர்கள் மாற்றினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai