சுடச்சுட

  
  spt1

  போஸ்னியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் எதிர்பார்த்தபடியே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஆர்ஜெண்டினா அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மெஸ்ஸி. முன்னதாக சியட் கோலஸ்னியச் சேம் சைடு கோலடித்ததன் மூலம் ஆர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  ரியோ டீ ஜெனீரோ நகரில் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை தடுக்க முற்பட்ட போது பந்து, ஹோண்டுரஸ் டிஃபண்டர் சியட் கோலஸ்னியச் காலில் பட்டு வலைக்குள் பாய்ந்தது. ஆர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

  போஸ்னியா அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லை எனவே மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணியினர் ஆதிக்கம் செலுத்துவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது பொய்த்தது.  ஆர்ஜெண்டினா வீரர்கள் பெரும்பான்மையான நேரம் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் முதல் பாதியில் அவர்களால் மேலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் போஸ்னியாவின் இரண்டு டிஃபண்டர்களை ஏமாற்றிய மெஸ்ஸி பந்தை கம்பத்தை நோக்கி அடித்தார். அது கம்பத்தின் வலது விளிம்பில் பட்டு உள்ளே பாய்ந்தது. அப்போது மரகானா மைதானத்தில் இருந்த 78, 800 ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இது உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் இரண்டாவது கோல். முதல் கோல் அடித்து சரியாக எட்டு ஆண்டுகளுக்கு பின் இந்த கோலை அடித்துள்ளார்.

  தொடர்ந்து ஆர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோலடிக்க முடியவில்லை. 85-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் மாற்று வீரராகக் களமிறங்கிய இபிசெவிச் ஒரு கோல் அடித்தார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மீதமுள்ள நேரத்தில் ஆர்ஜெண்டினா கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் 2-1 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. ஆர்ஜெண்டனா கேப்டன் மெஸ்ஸி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  புதிய நட்சத்திரம் உதயம்

  ஆர்ஜெண்டினா ஆடுகிறது என்றாலே, எதிர் அணியில் சிறந்த வீரர்கள் யார் இருந்தாலும் கண்டுகொள்ளப்பட மாட்டர். காரணம், லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை தொடரில் ஆர்ஜெண்டினாவை எதிர்த்து விளையாடிய முதல் அணி போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினோ. இந்த அணி குறித்து பாதிபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆட்டத்தில் போஸ்னியா தோற்றதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அந்த அணியின் புதிய நட்சத்திரமாக முகமது பெசிக் உருவாகியுள்ளார். ஆர்ஜெண்டினா, மெக்ஸிகோ, ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி 3 ஆட்டத்திலும் ஆட்ட நாயகன் விருதை பெசிக் வென்றுள்ளதே, அவரது நட்சத்திர அந்தஸ்துக்கான காரணமாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai