சுடச்சுட

  
  sch

  பனிச் சறுக்கு விளையாட்டின்போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமா நிலைக்குச் சென்று சிகிக்சை பெற்று வந்த ஃபார்முலா - 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். பிரான்ஸில் இருந்து தற்போது அவர் ஸ்விட்சர்லாந்து திரும்பியுள்ளார்.

  ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் கார்பந்தய வீரரான ஷூமேக்கர் கடந்த டிசம்பர் மாதம், பிரான்ஸின் கிரனோபில் பகுதியில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் தனது மகனுடன் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு பாரிஸில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

  கடந்த ஜனவரி மாதம் அவர் நினைவு திரும்புவதற்கு அறிகுறி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே திங்கள்கிழமை ஷூமேக்கர் கோமாவில் இருந்து நினைவு திரும்பி விட்டதாகவும், அடுத்த கட்ட சிகிச்சைக்காக அவர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள லாசேன் நகருக்கு சென்று விட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டெர்சி கிறிஸ்டன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai