சுடச்சுட

  

  பிரான்ஸ் - ஹோண்டுரஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஸிமா அடித்த பந்து கோல் கம்பத்தின் வலது மூலையில் பட்டு கீழே விழுந்தது. பந்து எல்லைக் கோட்டைக் கடந்து வலைக்குள் செல்லும் முன் ஹோண்டுரஸ் கோல் கீப்பர் நொயல் வலாட்ரஸ் பந்தை வெளியே தட்டி விட்டார். ஆனால், பந்து உள்ளே சென்று விட்டதாக சந்தேகம் எழுந்தது. எனவே, இது கோலா இல்லையா என்பதை அறிய கோல் லைன் டெக்னாலஜியின் உதவி நாடப்பட்டது. ஏழு கேமிராக்களின் உதவியுடன் காட்சிகளை துல்லியமாக ஆய்வு செய்ததில் அது கோல் எனத் தெரியவந்தது.

  இதனால் நடுவரின் கடிகாரத்தில் "கோல்' என்ற ஃபிளாஷ் லைட் ஒளிர்ந்தது. இந்த உலகக் கோப்பையில் கோல் லைன் டெக்னாலஜி அறிவித்த முதல் கோல் இதுவே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai