சுடச்சுட

    
    messi

    போஸ்னியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் எதிர்பார்த்தபடியே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஆர்ஜெண்டினா அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மெஸ்ஸி. முன்னதாக சியட் கோலஸ்னியச் சேம் சைடு கோலடித்ததன் மூலம் ஆர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    ரியோ டீ ஜெனீரோ நகரில் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை தடுக்க முற்பட்ட போது பந்து, ஹோண்டுரஸ் டிஃபண்டர் சியட் கோலஸ்னியச் காலில் பட்டு வலைக்குள் பாய்ந்தது. ஆர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

    போஸ்னியா அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லை எனவே மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணியினர் ஆதிக்கம் செலுத்துவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது பொய்த்தது.  ஆர்ஜெண்டினா வீரர்கள் பெரும்பான்மையான நேரம் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் முதல் பாதியில் அவர்களால் மேலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

    ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் போஸ்னியாவின் இரண்டு டிஃபண்டர்களிடம் இருந்து பந்தை லாவகமாக ஏமாற்றிய மெஸ்ஸி பந்தை கம்பத்தை நோக்கி அடித்தார். அது கம்பத்தின் வலது விளிம்பில் பட்டு உள்ளே பாய்ந்தது. அப்போது மரக்கானா மைதானத்தில் இருந்த 78, 800 ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இது உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் இரண்டாவது கோல். முதல் கோல் அடித்து சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த கோலை அடித்துள்ளார்.

    தொடர்ந்து ஆர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோலடிக்க முடியவில்லை. 85-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் மாற்று வீரராகக் களமிறங்கிய இபிசெவிச் ஒரு கோல் அடித்தார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மீதமுள்ள நேரத்தில் ஆர்ஜெண்டினா கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் 2-1 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. ஆர்ஜெண்டனா கேப்டன் மெஸ்ஸி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     

    ஆர்ஜெண்டினா - போஸ்னியா

    மொத்த ஷாட்கள் 12 16

    இலக்கை நோக்கிய ஷாட் 2 6

    பந்தை தக்கவைத்தது  59 41

    துல்லிய பாஸ்  90 85

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai