சுடச்சுட

  
  neymar

  குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜூன் 18-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மெக்ஸிகோவிடம் அடைந்த தோல்விக்கு பிரேசில் பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேசன் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பிரேசில் ஏற்கெனவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  பிரேசில் முன்கள வீரர் ஹல்க் கூறுகையில் "ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்தது வருத்தம்தான். அடுத்த ஒலிம்பிக்கில் நாங்கள் இலக்கை அடைவோம். மெக்ஸிகோவுக்கு எதிரான ஆட்டத்தை பழிவாங்கும் ஆட்டமாகக் கருதவில்லை. அப்படி கருதினால் அது எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். கான்ஃபெடரேஷன் கோப்பையில் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டோம். இந்தமுறையும் வெற்றிதான் எங்கள் இலக்கு' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai