சுடச்சுட

  

  போர்டோ அலெஜ்ரி, ஜூன் 16: கரீம் பென்ஸிமா இரண்டு கோல்கள் அடித்து கைகொடுக்க ஹோண்டுரஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

  குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் பிரேசிலின் போர்டோ அலெஜ்ரி நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 43-வது நிமிடத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட ஹோண்டுரஸ் வீரர் வில்சன் பேலசியஸூக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி கிக்கை கரீம் பென்ஸிமா கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் வேலட்ரஸ் சேம் சைடு கோல் அடிக்க பிரான்ஸ் 2-0 என முன்னிலை பெற்றது.

  பின்னர் 72-வது நிமிடத்தில் பென்ஸிமா மீண்டும் ஒரு கோல் அடித்தார். அது கோலா இல்லையா என்ற சர்ச்சை நிலவியது. பின், கோல் லென் டெக்னாலஜியின் உதவியுடன் ஆய்வு செய்ததில் கோல் என்பது உறுதியானது. முடிவில் 3-0 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.

  வெற்றிக்குப் பின் கரிஸ்மா கூறுகையில் "பந்து எல்லையைக் கடந்து விட்டதைப் பார்த்தேன். இதுபோன்ற தொழில்நுட்பம் கால்பந்துக்கு நல்லதா எனத் தெரியாது. ஆனால், எல்லாவற்றையும் விட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

   

  ஆட்டங்கள்

  ஜூன் 17: இரவு 9.30 பெல்ஜியம் - அல்ஜீரியா

  ஜூன் 18: அதிகாலை 12.30 பிரேசில் - மெக்ஸிகோ

  அதிகாலை 3.30 ரஷியா - தென் கொரியா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai