சுடச்சுட

  

  கோவையில் நடந்த தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில், ஹரியாணா அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி நடந்தது. இப்போட்டியின் அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் ஹரியாணா, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் ஹரியாணா 23-19 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. ஹரியாணா அணியின் சோனியா அதிகபட்சமாக 12 கோல்களை அடித்தார்.

  இரண்டாவது அரையிறுதியில் தமிழ்நாடு, ஹிமாசல பிரதேச அணிகள் மோதின. இதில் 29-28 என்ற கோல் கணக்கில் ஹிமாசல பிரதேச அணி வென்றது. ஹிமாசல பிரதேசத்தின் நிதி அதிகபட்சமாக 13 கோல்களை அடித்தார். தமிழகத்தின் சந்தியா 14 கோல்களை அடித்தார்.

  மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கான ஆட்டத்தில், அரையிறுதியில் தோல்வியடைந்த தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 29-28 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தது. தமிழக அணியின் சந்தியா 15 கோல்கள் அடித்தார்.

  இறுதிச் சுற்றில் ஹரியாணா, ஹிமாசல பிரதேச அணிகள் மோதின. இதில் 35-28 என்ற கோல் கணக்கில் ஹரியாணா அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் பிபிதா அதிகபட்சமாக 18 கோல்கள் அடித்து சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்கு உதவிபுரிந்தார்.

  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai