சுடச்சுட

  
  goal

  அல்ஜீரியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.

  1982ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிலியை தோற்கடித்த பின் அல்ஜீரியா எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை. 32 ஆண்டுகளுக்குப் பின் முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருந்த அல்ஜீரியாவுக்கு பெல்ஜியம் வாய்ப்பு அளிக்கவில்லை.

  பெலே ஹரிசான்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் சோபியன் ஃபெகெüலி கோல் அடித்தார். பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதியில் 1-0 என அல்ஜீரியா முன்னிலை பெற்றது.

  60ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் எடன் ஹஸர்டு கொடுத்த பாûஸ ட்ரைஸ் மெர்டென்ஸ் தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் மாற்று வீரராக களம்புகுந்த பெல்ஜியத்தின் நடுகள வீரர் மரெüன் ஃபெலானி ஒரு கோல் அடித்தார். முடிவில் 2-1 என பெல்ஜியம் வெற்றி பெற்றது.

  சிலியை வீழ்த்துமா ஸ்பெயின்?

  நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 5-1 என மோசமாக தோல்வியடைந்தது. நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய ஸ்பெயினுக்கு இந்த தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே சிலிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

  கடந்த முறையும் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் தோல்வியடைந்தது. பின், எழுச்சி பெற்று பட்டம் வென்றது. எனவே இம்முறையும் பீனிக்ஸ் பறவை போல ஸ்பெயின் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆட்டங்கள்

  18ஆம் தேதி: ஆஸ்திரேலியா - நெதர்லாந்து (இரவு 9.30)

  19ஆம் தேதி: ஸ்பெயின் - சிலி (அதிகாலை 12.30)

  கேமரூன் - குரோஷியா (அதிகாலை 3.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai