சுடச்சுட

  

  இந்திய, வங்கதேச அணிகளுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மிர்பூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

  தோனி, கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் ரெய்னா தலைமையிலான இந்திய அணி இத்தொடரை எதிர்கொண்டது.

  முதல் 2 ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே தொடரை வென்று விட்ட இந்திய அணி, கடைசி ஒருநாள் ஆட்டத்தையும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

  2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினர். ஆயினும், பந்து வீச்சில் சுதாரித்த வீரர்கள் 58 ரன்களுக்கு வங்கதேசத்தை ஆல் அவுட் செய்து சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

  முதல் ஒருநாள் ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களும், 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேற்றியதால், அணித் தலைவர் ரெய்னா மகிழ்ச்சியில் உள்ளார்.

  பின்னி மகிழ்ச்சி: வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 4 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஸ்டூவார்ட் பின்னி. இதனால், கும்ப்ளேயின் 1993ஆம் ஆண்டு சாதனையை (6வி/12) பின்னி முறியடித்தார்.

  இது குறித்து அவர் கூறுகையில், "எல்லா மைதானங்களிலும் ஸ்விங் பந்து வீசுவது எனது பலம். பந்து வீசுவதற்கு சாதகமான சூழல் நிலவியதால் சிறப்பாக பந்து வீசியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்தால் அது ஆச்சரியத்தை அளிக்கும்' என்றார்.

  எங்களை மன்னியுங்கள்: 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மோசமான வகையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் வங்கதேச கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  "வெற்றி பெற நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால், என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை. மோசமான தோல்விக்குப் பிறகு எங்களது பலவீனங்கள் கண்டறியப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai