Enable Javscript for better performance
கானாவை வீழ்த்தியது அமெரிக்கா- Dinamani

சுடச்சுட

  

  கானாவை வீழ்த்தியது அமெரிக்கா

  By dn  |   Published on : 18th June 2014 12:09 AM  |   அ+அ அ-   |    |  

  head

  உலகக் கோப்பை போட்டியின் கானாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜான் ப்ரூக்ஸ் கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

  இந்த வெற்றியின் மூலம் கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் கானாவிடம் அடைந்த தோல்விக்கு அமெரிக்கா பழி தீர்த்துக் கொண்டது. இந்த வெற்றியை அமெரிக்கர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

  இரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் பிரேசிலின் நேடால் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டா மர்கஸ்

  பேஸ்லே கொடுத்த பாûஸ இரண்டு டிஃபண்டர்களக் கடந்து அசத்தலாக கோலாக்கினார்.

  அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சே. உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட ஐந்தாவது கோல் இது. இதற்கு கானா வீரர்களால் பதிலடி கொடிக்கமுடியவில்லை. இதனால், முதல்பாதியில் 1-0 என அமெரிக்கா முன்னிலையில் இருந்தது.

  கடந்த முறை காலிறுதிக்கு முன்னேறிய கானா அணிக்கு ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் ஆண்ட்ரூ ஏவ் கோல் அடித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த நான்கு நிமிடத்தில் கார்னர் கிக்கை தலையால் முட்டி அமெரிக்காவுக்கு இரண்டாவது கோலைப் பெற்றுத் தந்தார் ஜான் ப்ரூக்ஸ். முடிவில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

  முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த கானா அணி ஜூன் 21-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

  சர்ச்சையைத் தகர்த்து...

  அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஐந்து பேர் ஜெர்மனியில் பிறந்தவர்கள். இதில் வெற்றிக்கான கோலை அடித்த ஜான் ப்ரூக்ஸýம் அடக்கம். உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தபோது, வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் அமெரிக்க பயிற்சியாளர் ஜுர்ஜென் கிளின்ஸ்மெனின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தற்போது முதல் ஆட்டத்தில் ப்ரூக்ஸ் கோல் அடித்து தன் தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

  துளிகள்...

  *சால்வேடாரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும், நெதர்லாந்தும் மோதின. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 5-1 என வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் இதுவரையிலான ஆட்டங்களில் இதுதான் த்ரில்லான ஆட்டம் என கூறப்படுகிறது. ஆனால், ஆட்டம் நடந்த அரீனா ஃபோன்டிநோவா மைதானத்தில் 3,500 இருக்கைகள் காலியாக இருந்ததாக ஃபிஃபா அறிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் 48,173 பேர் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

  * உலகக் கோப்பை முடியும் வரை ரஷிய வீரர்கள் யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பயன்படுத்துக் கூடாது என அணியின் பயிற்சியாளர் ஃபேபியோ கெப்பல்லோ உத்தரவிட்டுள்ளார்.

  * உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளில் ஜெர்மனியின் பயிற்சியாளர் லூயிப் ஃபெலிப் ஸ்காலரி மட்டுமே கூகுள் இணையத்தில் அதிகமுறை தேடப்பட்டுள்ளார்.

   

  ரசிகர்கள் சங்கமம்

   

  என்னதான் எல்சிடி தொலைக்காட்சி, ஏசி அறை, நொறுக்குத் தீனி என சகல வசதிகளுடன் இருந்தாலும், விக்கெட் விழுந்ததும் ஹே....வென கோரஷாக பஞ்சாயத்து போர்டு அல்லது ஷோ ரூம்களில் கிரிக்கெட் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வீட்டில் தனி அறையில் கிடைக்காதுதானே? அதுபோலத்தான் தற்போதயை உலகக் கோப்பையை வீட்டில் பார்ப்பதற்குப் பதிலாக ஒரு பொதுவான இடத்தில் கூடி அகன்ற திரையில் ரசிக்கின்றனர் கால்பந்து ரசிகர்கள். இந்த கூடலுக்கு "ஃபேன் ஃபீஸ்ட்' என்று பெயர். அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஜெர்மனியின் பெர்லின், ஸ்பெயினின் மாட்ரிட், இத்தாலியின் ரோம் உள்ளிட்ட பெரு நகரங்களில் அகன்ற திரையின் முன் ஆர்ப்பரிக்கும் சில காட்சிகள் மட்டும் இங்கே.

   

  "ஹாட்ரிக்' நாயகன் முல்லர்

  ஜெர்மனியில் செவ்வாய்க்கிழமை வெளியான பத்திரிகைகள் அனைத்திலும் பிரதான செய்தியாக இடம் பிடித்திருந்தார் அந்நாட்டு கால்பந்து அணியின் தாமஸ் முல்லர். 2 காரணங்களுக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். முதலாவது, ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல். மற்றொன்று, போர்ச்சுகல் வீரரான பெபேவின் தாக்குதலால் கீழே வீழ்ந்தபின்பும், ஒரு கோல் அடித்து தனது திறமையை நிரூபித்தது.

  தற்போது, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை முல்லர் பிடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் அவரே அதிக கோல்களை (5) அடித்தவர் என்பது அவரது நீடித்த மற்றும் நிலையான திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

  ஆடுகளத்தில் பந்தை அடிப்பதற்கு ஏதுவாக எதிரணி வீரர்களின் தொந்தரவு இல்லாமல் இடைவெளி ஏற்படுத்துவதில் தன் பெயரைப் பதிப்பவர் முல்லர். "சிறந்த தாக்குதல் வீரர் என்பவர், பந்தை "ட்ரிபிள் செய்வது', "பாஸ் செய்வது', "கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிப்பது' ஆகிய திறன்களைக் கொண்டிருப்பது அல்ல; சிறப்பாக விளையாட போதுமான இடைவெளியை ஏற்படுத்துவதுதான்' என்று முல்லரே தெரிவிக்கிறார்.

  முல்லரின் தந்தை பெயர் ஜெரார்டு. ஆனால், ஜெர்மன் முன்னாள் கால்பந்து வீரரான ஜெர்டு முல்லருக்கும், தாமஸ் முல்லருக்கும் இடையே எவ்விதத் தொடர்பில்லை. பெரும்பாலானோர் இருவரும் தந்தை-மகன் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். எப்படியோ ஜெர்மனியின் பெயரை 2 முல்லர்களும் அலங்கரித்து விட்டனர். தாமஸ் முல்லரின் திறமை தன்னை வெகுவாக கவர்ந்ததாக ஜெர்டு முல்லர் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

   

  ஜப்பானியர்களின் தனித்துவம்

  கல்வியைவிட நாட்டின் கலாசாரம் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத ஜப்பானியர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து ஒழுக்கத்தை போதித்து விடுகின்றனர். அது, பல நாட்டினர் ஒரே இடத்தில் கூடினாலும் அவர்களின் தனிப்பண்பை எடுத்துரைத்து விடுகிறது. அந்த தனித்துவம் தற்போது பிரேசிலில் வெளிவந்துள்ளது. ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆட்டம் முடிந்த பின் அந்த மைதானத்தின் இருக்கைகளுக்கு அடியே போடப்பட்ட குப்பைகளை அகற்றி தங்களது கலாசாரத்தை உயர்த்திய அவர்கள், அனைவரின் மனதிலும் இடம் பிடித்தனர்.

  kattana sevai