சுடச்சுட

  
  goal

  அலெக்லாண்டர் கெர்ஷகோவ் சரியான நேரத்தில் கோல் அடிக்க தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என ரஷியா டிரா செய்தது.

  பிரேசிலின் கியுயிபாவில் புதன்கிழமை அதிகாலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய லீ கியுன் ஹோ கோல் அடித்தார்.

  சரியாக ஆறு நிமிடங்கள் கழித்து கெர்ஷகோவ் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த கெர்ஷகோவின் இந்த கோல் ரஷியர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. 2018 உலகக் கோப்பை ரஷியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

  கெர்ஷகோவுக்குப் பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த முடிவின் மூலம் இரு அணிகளும் குரூப் எச் பிரிவில் பெல்ஜியத்துக்கு அடுத்த இடங்களில் உள்ளன.

  இந்த ஆட்டத்தில் ரஷிய கோல் கீப்பர் ஐகர் அகின்ஃபீவ் கோலைத் தடுக்கத் தவறியதாக விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு அணியின் பயிற்சியாளர் ஃபேபியோ பதிலளிக்கையில் "வீரர்கள் பெனால்டி கிக்கை கோலடிக்க தவறுவதைப் போல கோல் கீப்பர் பந்தைப் பிடிக்கத் தவறி விட்டார்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai