சுடச்சுட

  

  *காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் விதமாக மலேசியாவில் முத்தரப்பு ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூஸிலாந்து, மலேசிய அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி நியூஸிலாந்தின் ஜோயல் கிங் - அமந்தா லேண்டர்ஸ் முர்பியை 8-11, 11-5, 11-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

  *இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜகர்தாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-17, 21-19 என ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆனால், இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா, அஸ்வினி ஜோடி, தென் கொரியாவின் யி நா ஜங் - யங் கிம் ஜோடியிடம் வீழ்ந்தது.

  * சர்வேத டென்னிஸ் பிரிமியர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் சிங்கப்பூர் அணியை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் காவஸ்கர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  * ஐசிசி தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பதவிக்கு சீனிவாசன் போட்டியிடுவதை பிசிசிஐ வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக ஐசிசிக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்து விட்டது.

  * இந்தியாவின் புரவ் ராஜா - பிரேசிலின் மார்செலோ டெமோலைனர் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  *உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஏழு புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

  * ஆறாவது ஐபிஎல் போட்டியின்போது நிகழ்ந்த சூதாட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகுல் முக்தல் தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னாள் கேப்டன் கங்குலி இணைந்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai