சுடச்சுட

  
  australia

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப்-16 சுற்றுக்கு நெதர்லாந்து அணி முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

  இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர்.

  போர்டோ அலெஜ்ரி நகரில் புதன்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தியதில் பெரும்பங்காற்றிய நெதர்லாந்து அணியின் ஆர்ஜென் ராபின் 20-வது நிமிடத்தில் மைதானத்தின் பாதியில் இருந்து அற்புதமாக பந்தைக் கடத்தி வந்து தனி ஆளாக கோலடித்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் மேத்யூ லெக்கீ கொடுத்த கிராûஸ நொடியும் தாமதிக்காது கோல் அடித்தார் ஆஸ்திரேலியாவின் சஹில். இது உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் ஐந்தாவது கோல். இதனால் ஆட்டம் முதல் பாதியில் 1-1 என சமநிலை அடைந்தது. 54-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டெரில் ஜன்மத் கையில் பந்து பட்டு விடவே ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் கேப்டன் ஜெடினக் கோலடித்தார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக 58-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வேன் பெர்ஸி கோல் அடித்தார். இந்த கோல் நெதர்லாந்து அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு என்றும் சொல்லலாம்.

  தொடர்ந்து இரு அணிகளும் முரட்டுத்தனமாக ஆடியது. 68-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு மாற்று வீரராக களமிறங்கிய டெபே ஒரு கோல் அடித்தார். முடிவில் 3-2 என நெதர்லாந்து வெற்றி பெற்றது.

  ஒரு கட்டத்தில் சஹிலும், பர்னோ மார்டின்ஸýம் மோதிக் கொண்டனர். இதில் பர்னோ காயமடையவே அவர் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். சஹிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதேபோல பெர்ஸýவும் மஞ்சள் அட்டை பெற்றார். எனவே அவர் சிலிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai