சுடச்சுட

  
  CUP

  இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இருப்பினும், முதலில் பேட் செய்த இந்திய அணி மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

  சுரேஷ் ரெய்னா தலைமையில் வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே 2-0 என தொடரை வென்றது. 3-வது ஆட்டம் மிர்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. முந்தைய ஆட்டங்களைப் போலவே நேற்றைய ஆட்டத்தின்போதும் மழை குறுக்கிட்டது. தொடர் மழை காரணமாக ஆட்டம் 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

  முதலில் பேட் செய்த இந்திய அணி 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தைத் தொடர முடியாத அளவு மைதானத்தில் நீர் தேங்கியிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  முக்கியத்துவம் இல்லாத ஆட்டம் எனினும் இந்திய அணியின் பேட்டிங் முந்தைய ஆட்டத்தைப் போல படு மோசமாக இருந்தது. தொடக்க வீரர் உத்தப்பாவும், ரஹானேவும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. அம்பாடி ராயுடு, மனோஜ் திவாரி வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. கேப்டன் ரெய்னா 25 ரன்கள் எடுத்தார். அவருடன் ஒத்துழைத்த புஜாரா 27 ரன்கள் (63 பந்துகள்) அடித்தார். கடைசி நேரத்தில் ஸ்டூவார்ட் பின்னி 25 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்திய அணி மூன்றிலக்கத்தை எட்டியது. இல்லையெனில் மோசமான ஸ்கோரைப் பதிவு செய்திருக்கும்.

  முன்னணி வீரர்கள் இல்லாமல் வங்கதேசம் சென்ற இளம் இந்திய அணி இன்னும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த சுற்றுப் பயணம் கற்றுத் தந்த பாடம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai