சுடச்சுட

  
  cry

  "இயல்பாகவே நான் உணர்ச்சிபடக் கூடியவன். அதனால்தான் தேசியகீதம் பாடும்போது அழுதேன்' என்று ஐவரி கோஸ்ட் அணியின் டீ செரி தெரிவித்தார்.

  கொலம்பியா, ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஐவரி கோஸ்ட் அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அந்த அணியின் நடுகள வீரரான டீ செரி, கண்ணீர் வீட்டு அழுதார். சில நாள்களுக்கு முன்பு அவரது தந்தை இறந்து விட்டார்; அதனால்தான் அவர் அழுகிறார் என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை முழுவதும் மறுத்துள்ளார் டீ செரி.

  இது குறித்து அவர் கூறுகையில், "நான் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எனது வாழ்வில் பல மறக்க முடியாத தருணங்களை எதிர்கொண்டுள்ளேன். 2004ஆம் ஆண்டு எனது தந்தை இறந்ததையும், நான் பட்ட கஷ்டங்களையும் நினைத்து பார்த்தேன். தேசிய அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இதை நினைக்கும்போது அழுதுவிட்டேன். அழுகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயன்றேன். ஆனால், முடியவில்லை. கொலம்பியாவுக்கு எதிராக தோற்றபோதும், அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் கிரேக்கத்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai