சுடச்சுட

  
  Oscar

  செளரஸின் ஆட்டம் குறித்து உருகுவேயின் பயிற்சியாளர் ஆஸ்கர் டபரெஸ் கூறுகையில், "சந்தேகமே இல்லை. செளரஸ் அற்புதமான வீரர். காயம் காரணமாக கடந்த 5 வாரங்களில் செளரஸ் விளையாடவில்லை. "ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர் கட்டயமாக வீல் சேரில் வெளியேற வேண்டும்' என்று உருகுவேயில் கூறப்படுவது உண்டு. ஆனால், அதற்கு மாறாக செளரஸ் எழுந்து நடந்தார். அதனால்தான் அவரால் இன்று விளையாட முடிந்தது.

  அணி வீரர்கள் அவரை நேசிக்கின்றனர். எங்களுக்கு அவர் விலைமதிப்பு மிக்க முடியாத வீரர். அவர் எங்களுடன் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம். காயத்திலிருந்து அவரை மீட்ட மருத்துவகுழுவினருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

  காயத்திலிருந்து அவர் மீண்டிருந்ததால், சரியாக விளையாட முடியவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்' என்றார்.

   

  ஆட்டங்கள்

   

  21ஆம் தேதி: ஆர்ஜெண்டினா - ஈரான் (இரவு 9.30)

  22ஆம் தேதி: ஜெர்மனி - கானா (அதிகாலை 12.30),

  நைஜீரியா - போஸ்னியா (அதிகாலை 3.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai