சுடச்சுட

  
  Roy

  பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. இது, கடந்த 56 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான செயல்பாடாகும். ஆனால், இந்த பின்னடைவினால் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்று ராய் ஹாட்ஜன் தெரிவித்துள்ளார்.

  "தோல்விகளினால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், அதற்காக பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகு வேண்டும் என்று கருதவில்லை. உருகுவேயின் முதல் கோலை சமன்செய்ய நாங்கள் கடுமையாகப் போராடினோம். அதற்குப் பலனும் கிடைத்தது. ஆட்டத்தை எப்படியாவது டிரா செய்து விடுவோம் என்று கருதினேன். ஆனால், செளரஸின் நம்பமுடியாத கோலால் நாங்கள் தோற்று விட்டோம். இந்த நேரத்தில் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆட்டத்தின் பெரும்பகுதி செளரûஸ நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், எங்கள் கேப்டன் ஜெரார்டு செய்த தவறினால், அந்த அணிக்கு 2ஆவது கோல் கிடைத்தது' என்று ஹாட்ஜன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai