சுடச்சுட

  

  தங்கள் அணி பிரமாதமாகவோ அல்லது மோசமாகவே செயல்பட்டால் அதனை முதலில் சுட்டிக்காட்டுவது அந்நாட்டு பத்திரிகைகள்தான். இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டை பிரிட்டன் பத்திரிகைகள் விமர்சித்து ஓய்ந்தபாடில்லை.

  பலமான, சவால் அளிக்கும் எதிரணியாக இருந்தால் அப்போது ஏற்படும் நெருக்கடியை இங்கிலாந்து வீரர்களால் சமாளிக்க முடியாது என்று அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

  ""இங்கிலாந்து அணியின் தற்காப்பு ஆட்டம் மிகவும் பலவீனம். அதனால், ஆட்டத்தில் ஏற்படும் நெருக்கடியை அந்த அணியினால் சமாளிக்க முடியவில்லை'' என்று டெய்லி மெய்ல் பத்திரிகை விமர்சித்துள்ளது. "போதிய திட்டமிடல் இல்லை. வீரர்கள் பயந்து விட்டனர். இங்கிலாந்து வெற்றி பெறும் என்று யாரும் உறுதி கூற முடியாது. கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட இங்கிலாந்து மீது ஒரு 5 நிமிடம் கூட நம்பிக்கை வைக்க முடியாது'' என்று மற்றொரு பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

  சன் பத்திரிகையில், "உருகுவேயின் செளரஸ் இங்கிலாந்து அணியை பழுதடைய வைத்து விட்டார். ஆயினும், ஆட்டத்தின் பெரும்பகுதி இங்கிலாந்து தடுமாறிய வண்ணமே இருந்தது. கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர். பந்தைத் தடுக்கவும் மறந்தனர்' என்று வசைமாறி பொழிந்துள்ளது.

  தி கார்டியன் பத்திரிகையில், "4 ஆண்டு திட்டமிடலுக்குப் பின், உலகக் கோப்பை தொடரின்மீது உணர்வுரீதியிலான எதிர்பார்ப்பு எழுவது பொதுவானது. ஆனால், இங்கிலாந்தின் கனவு 5 மோசமான நாள்களில் சிதைந்து விட்டது.' என்று தெரிவித்துள்ளது.

  "இங்கிலாந்து கேப்டன் ஜெரார்டின் 2 பெரிய தவறினால், நாடு அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று' என்று தி டைம்ஸ் பதிவு செய்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai