சுடச்சுட

  
  virat

  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையின் முதல் இடத்தை இந்தியாவின் விராட் கோலி இழந்தார்.

  சமீபத்தில் நடந்து முடிந்த வங்கேதசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்காததால், தரவரிசைப் புள்ளிகளை இழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ûஸ விட 13 புள்ளிகள் பின்தங்கி 2ஆம் இடத்துக்கு அவர் தள்ளப்பட்டார்.

  மற்ற வீரர்களான ஷிகர் தவன் 2 இடங்கள் பின்தங்கி 10ஆவது இடத்திலும், ரோஹித் 23ஆவது இடத்திலும் உள்ளனர்.

  டெஸ்ட் தரவரிசையின் முதல் இடத்திலும் டி வில்லியர்úஸ உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், விராட் கோலி 10ஆவது இடத்தில் உள்ளார். எனினும், இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவும் விளையாட உள்ளதால், டெஸ்ட் தரவரிசையிலும் கோலி முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai