சுடச்சுட

  

  இந்த சீசனின் 3ஆவது கிராண்ட்ஸ்லாமான புல் தரையில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் 23ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  இப்போட்டியின் முதல் சுற்றில் வீரர்கள் மோதும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  இதில், ஆடவர் பிரிவு நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, முதல் சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினுடன் மோதுகிறார்.

  மற்ற வீரர்களில் செர்பியாவின் ஜோகோவிச்-கஜகஸ்தானின் குல்பெவுடனும், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா- போர்ச்சுகலின் செளஸாவுடனும், ஃபெடரர்-இத்தாலியின் லாரென்ஸியுடனும், ஸ்பெயினின் ரஃபேல் நடால்-ஸ்லோவேகியாவின் கில்ஸானுடனும் மோதுகின்றனர்.

  இந்தியாவின் சார்பில் விளையாடும் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் சுற்றில் போலந்தின் ஜான்கோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

  மகளிர் பிரிவில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஃபிரான்ஸின் மரியான் பர்டோலி, டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

  10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 17ஆவது வயதில் விம்பிள்டன் கோப்பையை வென்ற ரஷியாவின் மரியா ஷரபோவா, பிரிட்டனின் சமந்தா முர்ரேவை எதிர்கொள்கிறார்.

  போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவின் டடிஸ்விலியுடனும், பெலாரஸின் அசரென்கா-குரோஷியாவின் லூசிச் பரோனியுடனும் மோதுகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai