சுடச்சுட

  
  rooney

  உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவேயின் லூயிஸ் செளரஸ் 2 கோல்களை அடித்து இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவை மங்கச் செய்தார்.

  கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்து தாழ்ந்த நிலையிலிருந்த உருகுவேயை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய செளரûஸ, அந்நாட்டு பத்திரிகை "உருகுவேயின் புகழ்பெற்ற மகன்' என்று வர்ணித்துள்ளது.

  சா பாலோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டம், இரு அணிகளுக்குமே மிக முக்கியம். இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோற்றிருந்தால், அடுத்த சுற்றை தக்க வைக்கும் போராட்டமாக இந்த ஆட்டம் உருவெடுத்தது.

  முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு இருந்தாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பதிவு செய்த முதல் அணி உருகுவே. ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் செளரஸ் முதல் கோல் அடித்தார்.

  இருப்பினும் அடுத்த பாதியில் சுதாரித்த இங்கிலாந்து வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 75ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் வேயன் ரூனி, தனது முதல் உலகக் கோப்பை கோலை பதிவு செய்தார். இதனால், ஆட்டம் சமநிலை அடைந்தது. வெற்றிக்கான கோலை அடிப்பது யார் என்பது அடுத்த 15 நிமிட போராட்டமாக அமைந்தது. ஆனால், 85ஆவது நிமிடத்தில் செளரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் அடிக்கப்பட்ட கோல் என்பதால், இங்கிலாந்து அணி வீரர்களால் மீண்டும் கோல் கணக்கை சமன் செய்ய முடியாமல் சோகத்துடன் வெளியேறினர்.

  இங்கிலாந்துக்கு அடுத்த சுற்று மிகவும் அரிது

  தனது முதல் உலகக் கோப்பை கோலை ரூனி அடித்தபோதும், இங்கிலாந்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போது அந்த அணியின்அடுத்த வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. டி பிரிவில் தலா 3 புள்ளிகளுடன் கோஸ்டா ரிகா அணி முதல் இடத்திலும், இத்தாலி 2ஆவது இடத்திலும் உள்ளது. 3 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் உருகுவே 3ஆவது இடத்தில்தான் உள்ளது. இங்கிலாந்து கடைசி இடத்தில் உள்ளது.

  இங்கிலாந்துக்கும், உருகுவேயுக்கும் இன்னும் 1 ஆட்டம் மட்டுமே உள்ளது. அதேசமயம், கோஸ்டா ரிகாவுக்கும், இத்தாலிக்கும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இத்தாலி விளையாடும் 2 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். அதேசமயம், கோஸ்டா ரிகாவுடான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது.

   

  "இங்கிலாந்துக்காரர்களுக்கு எனது கோல் அர்ப்பணிப்பு'

   

  இங்கிலாந்து கிளப் அணிக்கு விளையாடும்போது, தன்னைப் பார்த்து சிரித்த பிரிட்டன்காரர்களுக்கு தனது கோல்களை அர்ப்பணிப்பதாக இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு உருகுவேயின் லூயிஸ் செளரஸ் தெரிவித்தார்.

  அவர் மேலும் கூறுகையில், "நான் விளையாடி ஆட்டங்களில் இதுதான் சிறந்தது. இந்த நேரம், எனது வாழ்வின் மறக்க முடியாத தருணமாகும். சில நாள்களுக்கு முன்புவரை, இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்றே நான் கருதியிருந்தேன். இத்தொடர் தொடங்கும்முன்பு, என்னைப் பார்த்து சிரித்த இங்கிலாந்துக்காரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இது எனக்கு நல்ல நேரம். இப்போது அவர்கள் (பிரிட்டன்வாசிகள்) என்னைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்' என்று தெரிவித்தார்.

  இங்கிலாந்தின் லிவர்பூல் அணிக்காக 2011ஆம் ஆண்டு முதல் லூயிஸ் செளரஸ் விளையாடி வருகிறார். அதே அணிக்காகத்தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டும் விளையாடி வருகிறார்.இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின் அவரிடம் என்ன கூறினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர் சிறந்த வீரர். இது அவருக்கு துரதிருஷ்டமான நேரம். இந்த ஆட்டத்தை மறந்து தொடர்ந்து சிறப்பாக ஆடுமாறு அவரிடம் தெரிவித்தேன்' என்றார்.

  கோல்கள்...

  உருகுவே

  முதல் கோல்: ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் உருகுவேயின் எடின்சன் தூக்கி அடித்த பந்தை செளரஸ் தனது தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார்.

  2ஆவது கோல்: இறுதி நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜெரார்டு இழைத்த தவறினால் (85ஆவது நிமிடம்) தனக்கு கிடைத்த பந்தை விறுவிறுவென எதிரணியின் எல்லையை நோக்கிக் கடத்திச் சென்று செளரஸ், நேர்த்தியாக கவர் செய்து துல்லியமாக அடித்த பந்து வேகத்துடன் கம்பத்துக்குள் தஞ்சம் புகுந்தது.

  இங்கிலாந்து

  முதல் கோல்: 75ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகே சக வீரர் பாஸ் செய்த பந்தை அழகாக வலைக்குள் தட்டி தனது முதல் கோலை பதிவு செய்தார் வேயன் ரூனி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai