சுடச்சுட

  
  costal

  தந்திரமாக விளையாடக் கூடிய இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, லீக் சுற்றிலிருந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  டி பிரிவில் எந்த 2 அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதை நிர்ணயிக்கக் கூடிய இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், இத்தாலியே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதறகு தகுந்தாற்போல, அந்த அணியின் பேலடோலி, வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். ஆனால், தந்திரத்துக்கு சவால் அளிக்கும் விளையாட்டை வெளிப்படுத்திய கோஸ்டா ரிகா, இடைவேளைக்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அந்த கோலை அந்த அணியின் ரியஸ், தனது தலையால் அடித்தார்.

  அதன்பிறகு நடைபெற்ற 2ஆவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோஸ்டா ரிகா வெற்றி பெற்றது. 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போதுதான் லீக் சுற்றை கோஸ்டா ரிகா கடந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai