சுடச்சுட

  
  valenc

  எனெர் வேலன்சியா 2 கோல்கள் அடித்து உதவ ஹோண்டுராஸýக்கு எதிரான ஆட்டத்தில் ஈகுவேடார் 2-1 என வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் இ பிரிவில் ஈகுவேடார் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.

  முதன்முறையாக உலகக் கோப்பையில் வெற்றி பெறக் காத்திருந்த ஹோண்டுராஸ் அணிக்கு 31ஆவது நிமிடத்தில் கர்லோ காஸ்ட்லி ஒரு கோல் அடித்தார். அடுத்த 3 நிமிடத்தில் வெலன்ஸியா கோல் அடித்து கணக்கை நேர் செய்தார். பின்னர் 65ஆவது நிமிடத்தில் வால்டர் அயோவி கொடுத்த கிராûஸ தலையால் முட்டி கோல் அடித்தார் வேலன்சியா. இதற்கு கடைசிவரை ஹோண்டுராஸ் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் ஈகுவேடார் வெற்றி பெற்றது.

  இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த வேலன்சியா முந்தைய ஆட்டத்தில் ஏற்கெனவே ஒரு கோல் அடித்திருந்தார். இதனால், இந்த உலகக் கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ள கரீம் பென்ஸிமா, ராபின் வேன் பெர்ஸி, தாமஸ் முல்லர், ஆர்ஜென் ராபின் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

  வெற்றிக்குப் பின் வெலன்சியா கூறுகையில் "உலகக் கோப்பையில் கோல் அடிக்க வேண்டும் என்பது சிறு வயதில் இருந்து நான் கண்ட கனவு. இந்த கனவு நனவாக உதவிய பயிற்சியாளர் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி. கோல்டன் பூட் விருது குறித்து இப்போது சிந்திக்கவில்லை. எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே எங்கள் தற்போதைய குறிக்கோள்' என்றார்.

  ஆட்டங்கள்

   

  ஜூன் 22: பெல்ஜியம் - ரஷியா (இரவு 9.30)

  ஜூன் 23: தென் கொரியா - அல்ஜீரியா (அதிகாலை 12.30)

  அமெரிக்கா - போர்ச்சுகல் (அதிகாலை 3.30

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai