சுடச்சுட

  

  உலக பிளிட்ஸ் செஸ்:கார்ல்ஸைன் சாம்பியன்: ஆனந்துக்கு 5ஆவது இடம்

  By dn  |   Published on : 22nd June 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  carls

  துபையில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

  தற்போது உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்ஸைன், சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இப்போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

  முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் ஆனந்த் 11 ஆட்டங்களில் விளையாடி 7.5 புள்ளிகளைப் பெற்றிருந்தார். 2ஆம் நாளான சனிக்கிழமை அவர் விளையாடிய 10 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்றார். 2 நாள்களிலும் சேர்த்து 13.5 புள்ளிகளைப் பெற்று 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

  கார்ல்ஸைன் சாதனை: இப்போட்டியில் 17 புள்ளிகளைப் பெற்ற கார்ல்ஸைன், உலக ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

  இவர் ஏற்கெனவே, உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது, உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இதனால், 3 பிரிவிலான உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கார்ல்ஸைன் பெற்றார்.

  இப்போட்டியில் கார்ல்ஸைனுக்கு கடும் சவால் அளித்து வந்த ரஷியாவின் நெபோம்நியாச்ட்சி வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா வெண்கலத்தையும் வென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai