சுடச்சுட

  
  Ronaldo

  போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது.

  போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பயிற்சியின்போது அவர் ஐஸ் கட்டிகளை காலில் கட்டிக் கொண்டு பயிற்சி எடுத்தார். கூடுமானவரை அவர் நீண்டநேரம் பயிற்சி செய்தார். இருப்பினும் அவர் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

  ஜெர்மனிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4-0 என போர்ச்சுகல் தோல்வியைத் தழுவியது. இதில் ரொனால்டோ பங்கேற்றபோதும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அமெரிக்காவுக்கு எதிராக அவர் இடம்பெறவில்லை எனில் போர்ச்சுகலுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.

  தேவையில்லாமல் ஜெர்மனியின் தாமஸ் முல்லருடன் மோதலில் ஈடுபட்டு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் போர்ச்சுகலின் முக்கியமான பின்கள வீரர் பெபே. அமெரிக்காவுக்கு எதிராக பெபே ஆட இயலாது என்பதால் போர்ச்சுகலின் பின்களம் மேலும் வலுவடைந்துள்ளது. இதில் தோல்வியடையும் பட்சத்தில் போர்ச்சுகல் அணி இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியே நேரிடும்.

  போர்ச்சுகல் பலவீனமாக இருப்பதாக தெரிந்தாலும் அந்த அணியின் பயிற்சியாளர் பாலோ பென்டோ அணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அவர் கூறுகையில் "அமெரிக்கா சிறந்த அணி. அந்த அணியை மதிக்கிறோம். ஆனால், எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனவே அமெரிக்காவை வீழ்த்துவோம்' என்றார்.

  ஆனால், கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது அமெரிக்கா. ரொனால்டோ களமிறங்கி மாயம் செய்யாதவரை அமெரிக்காவை வீழ்த்துவது கடினமே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai